09-10-2019, 09:26 AM
[color=var(--title-color)]கேப்டன் கோலி, `ரிவர்ஸ் ஸ்விங்' ஷமி, `டைமிங்' ரோஹித்! - பிளஸ், மைனஸை ஷேர் செய்த ஷோயப் அக்தர்[/color]
[color=var(--meta-color)]ஷோயப் அக்தர்[/color]
[color=var(--content-color)]`ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப் பக்கம் மூலம் அவ்வப்போது தனது கருத்துகளையும் பழைய நினைவுகளையும் தெரிவித்து வருகிறார். அந்தவகையில் உலகக் கோப்பை போட்டிக்குப் பின் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி தன்னிடம் ஆலோசனை பெற்றது குறித்து அக்தர் தற்போது பேசியுள்ளார்
[color=var(--content-color)]
ஷமி
[/color]
[color=var(--content-color)]உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியுடன் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இந்திய பௌலர் முகமது ஷமி என்னைத் தொடர்புகொண்டார். தொலைபேசியில், ``இந்தியாவின் வெற்றிக்கு என்னால் பங்களிக்க முடியவில்லை. சிறப்பாகச் செயல்படவில்லை" என வருத்தம் தெரிவித்தார். அவருக்கு நான் சில ஆலோசனைகளை வழங்கினேன். நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம் என்றும், உடல்தகுதியை ஃபிட்டாக வைத்துக்கொள்ளுங்கள் என்றும் அவருக்கு அறிவுரை கொடுத்தேன். ஷமி ஒரு முழுமையான வேகப்பந்துவீச்சாளாராக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். தற்போது இருக்கும் ஃபாஸ்ட் பௌலர்களில் ஷமிக்கு மட்டுமே ரிவர்ஸ் ஸ்விங் நன்றாக வருகிறது. ஆசிய துணைக் கண்ட ஆடுகளங்களில் இது முக்கியமான ஒன்று
[color=var(--content-color)]இதை அவரிடம் தெரிவித்ததுடன், ``நீங்கள் ரிவர்ஸ் ஸ்விங்கின் ராஜாவாக வலம் வரலாம்'' என்று வலியுறுத்தினேன். அதற்கேற்ப தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பௌலர்களுக்குச் சாதகம் இல்லாத மைதானத்தில் ஷமி சிறப்பாகச் செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான் பௌலர்கள் தங்கள் பந்துவீச்சை மேம்படுத்துவது குறித்து எந்த அறிவுரையையும் என்னிடம் கேட்க முன்வருவதில்லை. ஆனால், ஷமி போன்ற இந்திய பௌலர்கள் அதைச் செய்கிறார்கள். பாகிஸ்தானைப் பொறுத்தவரை இது ஒரு சோகமான சூழ்நிலை.[/color]
[color=var(--content-color)]
ரோஹித்
[/color]
[color=var(--content-color)]இந்திய டெஸ்ட் அணிக்கு ரோஹித் ஓப்பனிங் கொடுக்க வேண்டும் என்று பலமுறை கூறி வருகிறேன். அவர் சிறந்த டெஸ்ட் வீரராக இருப்பதற்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளன. முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக்கைவிட ரோஹித் அதிக டெக்னிக் உடன் ஆடுகிறார். ஷேவாக் எப்போதும் அதிரடியாக ஆடி பௌலர்களை நொறுக்க வேண்டும் நினைப்பவர். ஆனால், ரோஹித்துக்கு பலமே அவரது டைமிங்தான். நிறைய வித்தியாசமான ஷாட்களை மிகவும் நேர்த்தியாக ஆடுகிறார். அவரைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது" எனக் கூறியுள்ளார்.[/color][/color][/color]

first 5 lakhs viewed thread tamil