Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]`ஓட ஓட விரட்டிய கொள்ளையர்கள்!'- பீச்சில் செல்போனுக்காகப் போராடிய இன்ஜினீயர்களுக்கு நேர்ந்த சோகம்[/color]
[color=var(--title-color)]சென்னை பாலவாக்கம் கடற்கரையில், இன்ஜினீயர்கள் இருவரை வழிமறித்து செல்போன்களைப் பறித்த கும்பலின் தலைவனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.[/color]
[Image: vikatan%2F2019-10%2F2a638b7c-4bff-490c-b...2Ccompress][color=var(--meta-color)]கைதான கோபி[/color]
[color=var(--content-color)]சென்னை நீலாங்கரை காவல் நிலையத்துக்குக் கடந்த 3-ம் தேதி, கையில் கட்டுடன் வந்துள்ளார் இளைஞர் ஒருவர். அவருடன் வந்த நபர், பதற்றத்துடன், ``நாங்கள் இருவரும் சென்னை பாலவாக்கம் கடற்கரையிலிருந்து பள்ளிக்கரனைக்குச் செல்லும்போது, 4 பேர் வழிமறித்தனர். பிறகு, அவர்கள் எங்களிடமிருந்த 2 செல்போன்கள் மற்றும் பணத்தைப் பறிக்க முயன்றனர். கொள்ளையர்களுடன் நாங்கள் இருவரும் போராடினோம். அப்போது அரிவாளால் வெட்டினர். அதைத் தடுத்தபோது உள்ளங்கையில் வெட்டு விழுந்தது. அதற்காக 7 தையல்களைப் போட்டுள்ளோம். எங்களிடம் செல்போன்கள், பணத்தைப் பறித்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2F4ac04209-3b94-4eb3-a...2Ccompress]
cell phone
[/color]
[color=var(--content-color)]இதையடுத்து, நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகின்ஜெர்ரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ், தலைமைக் காவலர்கள் சையத் அப்சர், சிவகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது பாலவாக்கத்தைச் சேர்ந்த கோபி மற்றும் அவரின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடிவந்த நிலையில், அக்கரை செக் போஸ்ட் அருகில் கோபி பைக்கில் செல்லும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார், கோபியை மடக்கினர். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பாலத்திலிருந்து கோபி குதித்துத் தப்பி ஓடினார். இதில் அவரின் இடது கையில் முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு கோபியை போலீஸார் கைதுசெய்து, அவரிடமிருந்த 2 கத்திகள், 2 பைக்குகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.[/color]

[color=var(--content-color)]கோபியின் பின்னணி குறித்து போலீஸார் கூறுகையில், ``சிவகங்கையைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். அவரின் நண்பர் புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துச்செல்வன். இவர்கள் இருவரும் டிப்ளமோ இன்ஜினீயரிங் படித்துவிட்டு பள்ளிக்கரணையில் நடைபெறும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இருவரும் கடந்த 3-ம் தேதி, பாலவாக்கம் கடற்கரைக்கு வந்துள்ளனர். பிறகு, இருவரும் வீட்டுக்குச் சென்றபோதுதான் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் (24) மற்றும் அவரின் கூட்டாளிகளான விஜய், ராகவா, ஜெய்கணேஷ் ஆகியோர் வழிமறித்துள்ளனர். கணேஷ்குமார், முத்துச்செல்வனிடம் செல்போன்கள், பணத்தைப் பறிக்க கோபி டீம் முயன்றுள்ளனர். இதில் நடந்த தகராறில் முத்துச்செல்வனின் உள்ளங்கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அரிவாளால் வெட்டிவிட்டு இருவரின் செல்போன்கள் மற்றும் பணத்தைப் பறித்துவிட்டு தப்பியோடிவிட்டது.
கணேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், கோபியைக் கைது செய்துள்ளோம். அவரின் கூட்டாளிகளைத் தேடிவருகிறோம். கோபி மீது 2016-ல் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை வழக்கும், 2017-ல் நீலாங்கரை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளன. இதுதவிர, அடிதடி என நீலாங்கரையில் மட்டும் 5 வழக்குகள் கோபி மீது உள்ளன. இதனால் கோபியைக் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் சிறையிலிருந்து வெளியில் வந்த கோபி, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். கணேஷ்குமார், முத்துச்செல்வனிடம் வழிப்பறி செய்த கோபி டீம், பைக் ஒன்றைத் திருடியுள்ளது. அதன்பிறகு, 7 -ம் தேதி காலையில் ஒருவரை வழிமறித்து பணத்தைப் பறித்துள்ளது. அந்தப் பணத்தில் மது வாங்க அக்கரை வழியாக வந்தபோதுதான், எங்களிடம் சிக்கிக் கொண்டார். கணேஷ்குமார், முத்துச்செல்வன் ஆகியோரின் செல்போன்கள் கோபியின் கூட்டாளிகளிடம் இருப்பதும் தெரியவந்துள்ளது" என்றனர்.
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 08-10-2019, 05:17 PM



Users browsing this thread: 84 Guest(s)