நீ by முகிலன்
நீ -80

சலசலவென.. நுரைத்துப் பொங்க.. சுழித்து.. வளைந்து.. நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது… பவானி ஆற்று நீர்..!! அதன் கரையோரத்தில்… நிறைய வளர்ந்து…படர்ந்திருந்த.. கோரைப் புல்லின் மேல்…நான் கால் நீட்டி..உட்கார்ந்திருந்தேன்..!!
என் பக்கத்தில்.. என் தோளை உரசியவாறு நீ உட்கார்ந்திருந்தாய். உன் உடல் என் நெருக்கத்தை விரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.  உன்னிடமிருந்து சற்று தள்ளி.. சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்திருந்தாள் தீபமலர்..!!
என்னிடம் உன்னை விட அதிகம் பேசியவள் தீபாதான். .! வாய் ஓயாது.. நிறையப் பேசினாள்..!!
திடுமென.. ” ஆமா.. நானேதான்… ரொம்ப நேரமா பேசிட்டிருக்கேன்..! நீங்க ரெண்டு பேரும்.. பேச மாட்டிங்களா..?” என்று கேட்டாள் தீபா.
நான் ஒரு புன்னகையுடன் சொன்னேன்.
  ”நாங்க… எங்க பேசறது..? நீதான் ஓட்டப் பானைல.. பூந்த ஈ மாதிரி… தொணதொணனு பேசிட்டே இருக்கியே..”
”ஓ..! அப்ப நான் பேசறது… ஓட்டப் பானைல ஈ பூந்த மாதிரி இருக்கா..?” என்று முறைத்தாள்.
”ஆமா…”

நீ குறுஞ் சிரிப்புச் சிரித்தாய்.
”சும்மாடி… உன்னை கிண்டல் பண்றாங்க..”
”ம்..ம்..! தெரியுது…தெரியுது..!!”என்றாள் ”இனி நான் பேசமாட்டேன்..! நீங்க என்ன பண்றீங்கனு பாக்கறேன்…!!”
” நாங்க என்ன பண்றம்னு பாக்கனுமா..?” என்று அவளைச் சீண்டினேன்.
” ஆமா…”
” சரி… பாத்துக்கோ..” என்று உன் இடுப்பில் கைபோட்டு.. உன்னை என் பக்கம் இழுத்தேன். நீ என் மேல் சரிந்தாய். நான்  உன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டேன்.

உடனே.. தீபாவின் கருத்த முகம் வெட்கத்தில்.. மலர்ந்தது.
”அய்யே… ச்சீ…!!”
”என்ன ச்சீ..? நீதான நாங்க என்ன பண்றம்னு பாக்கறேன்ன..?”
”ஆனா… நீங்க…இருக்கீங்களே…” என்று சிரித்தாள்.

நான் இழுத்து முத்தமிட்டதும் நீ.. அப்படியே என் தோளில் சாய்ந்து கொண்டாய்..! உன் இடுப்பை… நன்றாக இருக்கி.. அணைத்தேன்..!
”இப்ப.. ஒடம்பு பரவால்லியா.. தாமரை..?”
”அதெல்லாம்..ஒன்னும் இல்லீங்க..” என்றாய் முனகலாக.

தீபா..”அலோ..! நான் ஒருத்தி.. இங்க இருக்கேன்..!!” என்றாள்.
”இருந்துக்கோ…!!” என்றேன்.
” இது நல்லால்ல..”
” ரொம்ப நல்லாருக்கு..! இல்ல தாமரை..?”
”இருக்கும்..! இருக்கும்..!! அப்ப… எப்படியோ போங்க… நான் போறேன்…!!” என்று எழுந்தாள்.

நீ ”ஏய்.. எங்கடி போற..?” என்றாய்.
”வேற எங்க போறது..! நான் போறேன்..! நீங்க ஜாலியா இருங்க..!”
”ஏய்..! சும்மாடி… உக்காரு..!!” என்று சிரித்தேன்.
”பரவால்ல… என்ஜாய் பண்ணுங்க..! நான் கார்ல இருக்கேன்..!” என்றாள்.
நான் ”ஏய்.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. இருடி..! சும்மா நீ என்ன சொல்றேனு பாக்கத்தான்..!!” என்றேன்.
” ம்ம்..! பரவால்ல… பரவால்ல..! பாவம் அவ.. உங்களுக்காக சோறு தண்ணி இல்லாம.. ஏங்கிக் கெடக்கா.. அவளையும் கொஞசம் கவனிங்க..” என்றாள்.
”சோறு.. தண்ணி இல்லாமயா..?” என நான் கேட்க..
”அவ.. பொய் சொல்றாங்க..!!” என்றாய் நீ.

சட்டென தீபா..  ”ஏன்டி இப்படி புளுகற..? நெஜமா நீ.. இவருக்காக ஏங்கல..?” என்று உன்னைப் பார்த்துக் கேட்டாள்.
” அது… ஒன்னும்.. இதுக்காக இல்ல..! இவங்க அன்புக்கு…!!” என்றாய்.
”ரெண்டும் ஒன்னுதான்..! கொஞ்ச நேரம் கொஞ்சுங்க..! உன்னோட உசுரே… இவருதான..!! நான் கார்ல இருக்கேன்..!!”என்று விட்டு.. அங்கிருந்து நகர்ந்து… மேலே போய்விட்டாள்.

நான்  உன்னைப் பார்த்தேன். நீ கண்கள் பனிக்க.. என்னைப் பார்த்துச் சிரித்தாய். உன்னை இறுக்கி அணைத்தேன். உன் நெற்றியில் முத்தமிட்டேன்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 07-10-2019, 10:12 AM



Users browsing this thread: