Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--content-color)]தற்போது மரங்களை வெட்டுவதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர் மும்பை மக்கள். ஆனால் இந்த முறை எதிர்ப்பு புல்லட் ரயில் திட்டத்துக்கு இல்லை, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு. மும்பையின் ஆரே வனப்பகுதிக்கு அருகில் பணிமனைகள் அமைக்கும் பணிகளில் தீவிர காட்டி வருகிறது மும்பை மெட்ரோ நிர்வாகம். ஆனால், இந்தப் பணிமனைகளுக்காக ஆரே வனப்பகுதியில் உள்ள 2,702 மரங்களை வெட்டவேண்டிய நிலை உள்ளது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2F4553308e-130e-4b85-9...2Ccompress]
Aarey Forest[color=var(--meta-color)]ANI[/color]
[/color]
[color=var(--content-color)]இதைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என ஆரே காலனி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த ஜூலை மாதம், ஆரே காலனிப் பகுதியில் வசிக்கும் சுமார் 500 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் வரவுள்ள மெட்ரோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதற்கான வலுவான காரணங்களையும் முன்வைத்தனர்.[/color]

[color=var(--content-color)]வெறும் பெயருக்கு மட்டும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திவிட்டு தங்கள் திட்டப்படி மரங்கள் வெட்டும் பணிகளைச் செய்துள்ளது நிர்வாகம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 2,000 மரங்களுக்கு மாற்றாக வேறு இடத்தில் 400 மரங்களைப் புதிதாக நடுவதற்கு அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த ஆரே மக்கள், இந்த விவகாரம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2F92eaeceb-faaf-430e-8...2Ccompress]
Aarey Forest[color=var(--meta-color)]Twitter[/color]
[/color]
[color=var(--content-color)]அதில், `மெட்ரோ ரயில் கட்டுமானத்துக்கு மும்பை மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றுத்தான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மரங்கள் வெட்டத் தடைவிதிக்க முடியாது. மேலும் ஆரே பகுதியை வனப் பகுதியாக அறிவிக்கும் உரிமை இந்த நீதிமன்றத்துக்கு இல்லை. அதில் பசுமை தீர்ப்பாயம்தான் முடிவெடுக்க வேண்டும்’ எனத் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.[/color]

[color=var(--content-color)]தீர்ப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஆரேவில் மரம் வெட்டும் பணிகளில் தீவிரம் காட்டினர் அதிகாரிகள். இதை அப்பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது ஆரோ வனப்பகுதி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் அந்தப் பகுதியில் அமர்ந்து இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் காவலர்கள் அப்புறப்படுத்தினாலும் அங்குப் பதற்றம் நிலவி வருகிறது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2F66d440d1-be9f-477d-9...2Ccompress]
Aarey Forest Protest[color=var(--meta-color)]Twitter[/color]
[/color]
[color=var(--content-color)]அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் ஆரே பகுதி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். #AareyForest, #SaveAareyForest போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. மரங்களை வெட்ட வேண்டாம் எனக் கெஞ்சிய மக்களை, காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வீடியோ மற்றும் இரவில் அவசரமாக மரங்கள் வெட்டும் வீடியோ போன்றவை வைரலாகி சமூகவலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 07-10-2019, 09:29 AM



Users browsing this thread: 94 Guest(s)