Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கிய கும்பல்! அதிரடியாகக் கைது செய்த அறந்தாங்கி போலீஸ்[/color]

[color=var(--title-color)]புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இளைஞர்களுக்கு வலி நிவாரண மாத்திரைகளைப் போதை மாத்திரைகளாக விற்பனை செய்து அடிமைப்படுத்தி வந்த கும்பலை அறந்தாங்கி போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்த மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.[/color]
[Image: vikatan%2F2019-10%2Fb69b9b3d-7c40-4cc6-a...2Ccompress][color=var(--meta-color)]போதை மாத்திரைகள்[/color]
[color=var(--content-color)]புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் இளைஞர்கள் பலரும் சமீப காலங்களாகப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாகவும் அவர்களை மீட்க வேண்டும் என இளைஞர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி விசாரிக்க அறந்தாங்கி டி.எஸ்.பி கோகிலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2F21b8c6df-7e4c-4f55-8...2Ccompress]
போதை மாத்திரை விற்பனை செய்தவர்களை கைது செய்த போலீஸார்
[/color]
[color=var(--content-color)]இந்த நிலையில்தான், அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியில் சந்தேகப்படும்படியாகச் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். கஞ்சா வைத்திருந்த அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், போதை ஊசி பயன்படுத்துவதும் போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, எங்கு அந்தப் போதை மாத்திரைகளை வாங்குகிறார் என்பதைத் தெரிந்துகொண்டனர்.[/color]
[color=var(--content-color)]தொடர்ந்து மாறு வேடத்தில் சென்ற போலீஸார், புதுக்கோட்டையில் போதை மருந்து விற்பனையில் ஈடுபட்ட ரியாஸ் கான், ஜெகன் மற்றும் அவரின் மனைவி பானுமதி ஆகியோரை கையும் களவுமாகப் பிடித்தனர். கேன்சர் நோய்க்கான வலி நிவாரணிகளைப் போதை ஊசியாகக் கொடுத்துள்ளது தெரியவந்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2F5f3bbb74-396d-491f-b...2Ccompress]
போதை மாத்திரை விற்பனை செய்தவர்களை கைது செய்த போலீஸார்
[/color]
[color=var(--content-color)]அவர்களைக் கைது செய்த போலீஸார் நடத்திய விசாரணையில், திருப்பூர் அருகே அவினாசியைச் சேர்ந்த கெளதம் ராஜாதான் மாத்திரைகளை இவர்களுக்கு விநியோகித்து மூளையாகச் செயல்பட்டார் என்று தெரியவந்ததால், திருப்பூர் சென்று அவரைக் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக, வாசு, வினோத் என மொத்தமாக 6 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2,100 மாத்திரைகளைக் கைப்பற்றினர். அனைவரையும் அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 07-10-2019, 09:26 AM



Users browsing this thread: 72 Guest(s)