Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]‘பெண் அதிகாரியை மிரட்டிய எம்.எல்.ஏ; கைது செய்ய உத்தரவிட்ட ஜெகன்’- 5 மணி நேரத்தில் கிடைத்த பெயில்![/color]
[color=var(--content-color)]நேற்று ஜெகனின் ஓய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த ஸ்ரீதர் ரெட்டி எம்.எல்.ஏ, பெண் அதிகாரியை தொலைபேசியில் மிரட்டிய விவகாரம் பூதாகரமானது. அந்த எம்.எல்.ஏவுக்கு எதிராக காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யக்கோரி பெண் அதிகாரி தர்ணாவில் ஈடுபட்டது ஆந்திரா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதனையடுத்து மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்ட ஜெகன் யார் மீது தவறு உள்ளதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் எனக் கூறியுள்ளார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2F0bfdaf33-5f89-4c9a-8...2Ccompress]
ஜெகன்மோகன் ரெட்டி
[/color]
[color=var(--content-color)]ஸ்ரீதர் ரெட்டி, நெல்லூர் ரூரல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். குடிநீர் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஆனதாக கூறி மண்டல வளர்ச்சி அதிகாரியான சரளாவை போனில் தொடர்புக்கொண்டு மிரட்டியுள்ளார். அவரது தாயை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அவரது வீட்டிற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு மற்றும் குடிநீர் போன்றவற்றையும் ஸ்ரீதர் ரெட்டி துண்டித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அங்கு இன்ஸ்பெக்டர் இல்லாததால் புகாரை வாங்க காவலர்கள் மறுத்துவிட்டனர். இன்ஸ்பெக்டர் வரும் வரை காவல்நிலைய வளாகத்திலே அமர்ந்திருந்தார். இந்த செய்தி டி.வியில் ஒளிபரப்பானது. முதல்வரின் கவனத்துக்கு சென்றுள்ளது.[/color]
[color=var(--content-color)]இதனையடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்புக்கொண்டு யார் மீது தவறு உள்ளதோ நடவடிக்கை எடுங்கள் எனக் கூறியுள்ளார். சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்தனர். அந்தப்பெண்ணிடம் புகாரை பெற்றுகொண்டு எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுத்தனர். எம்.எல்.ஏ ஸ்ரீதர் ரெட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைகள் முடிந்து எம்.எல்.ஏ.வை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கைதான 5 மணிநேரத்தில் எம்.எல்.ஏ ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2Fe32a86dc-73a7-45e5-9...2Ccompress]
கைது
[/color]
[color=var(--content-color)]இச்சம்பவம் குறித்து பேசிய ஸ்ரீதர் ரெட்டி, “அந்தப்பெண் அதிகாரியிடம் திட்டத்திற்கான அனுமதியை விரைவுப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொண்டேன். அவர் என் மீது ஒரு பொய்யான வழக்கை தாக்கல் செய்துள்ளார். என்னுடைய அரசியல் எதிரிகளால் அவர் தூண்டப்படுகிறார் என்ற சந்தேகம் உள்ளது. நான் எப்படி குடிநீர் இணைப்பு, மின் இணைப்பை துண்டிப்பேன்” என கேள்வியெழுப்பியுள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சட்டசபையில் மிரட்டியது. தனக்கு எதிராக செய்தியை வெளியிட்ட நிருபரை போனில் மிரட்டியது என ஸ்ரீதர் ரெட்டி மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 07-10-2019, 09:24 AM



Users browsing this thread: 107 Guest(s)