சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
கொஞ்ச நேரம் sms எதுவும் வராமல் இருந்தது ராகவிடம் இருந்து.. அமைதியாய் உள்ளுக்குள் தவித்தாள் சங்கீதா (beep beep) என்று சத்தம் கேட்டவுடன் ஒரு நிமிடம் கார் சீட்டின் நுனிக்கு வந்து உடனே மெசேஜ் பார்த்தாள்.. message from raaghav: “என் தேவதை சராவுக்கு இந்த மக்கு ராகவ் குடுக்கும் இதழோடு இதழ் பதித்த ஆயிரம் முத்தங்கள்….” படித்து முடித்த பிறகு, அப்படியே கத்தி சிரிக்க வேண்டுமென்று இருந்தது சங்கீதாவுக்கு, ஆனால் காரில் செய்ய முடியாததால் அப்படியே கண்களை இறுக்கி மூடி பின்னாடி சாய்ந்து அவளது நினைவில் ராகவை கட்டி அனைத்து அவன் குடுத்த இதழ் முத்தங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டாள். முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. வயிற்றினில் உண்மையாகவே யாருடைய விரலும் இல்லாமல் அப்படி ஒரு கிச்சி கிச்சி உணர்வு வந்தது சங்கீதாவுக்கு. “என்னம்மா ஆச்சு ஏதாவது வயிறு பிரச்னையா soda வாங்கட்டுமா? சீட்டுல முன்னுக்கும் பின்னுக்கும் வந்து போறீங்க?” – என்று டிரைவர் தாத்தா அக்கறையாக கேட்க…. ஒரு நொடி சத்தமாகவே “ஹா ஹா ஹா” என்று சிரித்தாள். “தாத்தா….” “சொல்லுமா….” நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… கொஞ்சம் ரேடியோ போடுங்க ப்ளீஸ்… – என்று இந்த தேவதை கட்டளை இட்டதும் தாத்தா அடித்து புடித்து ரேடியோவை on செய்தார். அப்போது அதில் வந்த (Click)பாடலைக் கேட்ட போது உண்மையாகவே மனதில் ரொம்பி வழியும் சந்தோஷத்தோடு தனது பருவ உணர்வுகளை தாங்கிய வயதை பின் நோக்கி பயணித்தாள் இந்த தேவதை…. மேடம் bank போகனுமா? இல்லை வீட்டுக்கு போகனுமா? bank க்கு போங்க தாத்தா. தாத்தா ஓட்டும் மிதமான வேகத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்திருந்தாலும், ஏதோ பத்து நொடிகளில் bank வந்தது போல் இருந்தது சங்கீதாவுக்கு. மனதுக்குள் காதல் உருவெடுத்து இருக்கும் தாக்கம்!! சங்கீதா இறங்குகையில் டிரைவர் தாத்தா சங்கீதாவை அழைத்தார். “மேடம்..” “என்ன தாத்தா?” “இந்தாங்கம்மா..” “என்னது இது?” “காலைல வண்டி எடுக்கும்போதே நீங்க திரும்பி போகும்போது குடுக்க சொல்லி உத்தரவு. என்னன்னு எனக்கு தெரியாது மா..” ஒரு brown sealed கவரில் IOFI என்று அச்சிடப்பட்டு இருந்தது. கீழே ஏதோ எழுதி ராகவ் என்று கையெழுத்து இருந்தது. அதை தனிமையில் சென்று படிப்போம் என்று எண்ணி தாத்தாவை அனுப்பி வைத்துவிட்டாள் சங்கீதா. “மன்னவன் பெயரை சொல்லி மந்திரம் பாடி வந்தேன்….” – வண்டியில் கேட்ட பாடலை முனு முணுத்துக் கொண்டே முகத்தினில் அதே சிரிப்புடனும் சந்தோஷத்துடனும் உள்ளே சென்றாள்.


உள்ளே வந்தவள் ரம்யாவின் இருக்கையில் அவளுடைய handbag இருப்பதைப் பார்த்தாள். சாப்பாடு நேரம் நெருங்கி இருந்தது. இருப்பினும் ஒரு மணி நேரம் அவளது மேஜையில் அவளுக்கென இருக்கும் வேலைகள் என்னென்ன என்று பார்த்துவிட்டு ரம்யாவுக்கு phone செய்தாள். ரம்யாவின் phone ரிங்டோன் அருகில் கேட்பது தெரிந்து நிமிர்ந்து பார்த்தபோது “ஹாய் மேடம்….” என்று சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள். ஏய் லூசு, எங்கடி போய் தொலைஞ்ச? last one hour நான் உனக்காக waiting. ஹா ஹா…. சரி சரி வாங்க போகலாம். இருவரும் கான்டீன் சென்று அவர்களுடைய வழக்கமான ஜன்னல் ஓர இருக்கையில் சாப்பிட அமர்ந்தார்கள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 05-10-2019, 09:37 AM



Users browsing this thread: 1 Guest(s)