05-10-2019, 09:22 AM
3 வாரங்களில் 3 முக்கிய படங்கள்: தடுமாறும் தியேட்டர்கள்
தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நல்ல தியேட்டர்களைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்குத் தீர்வாக முன்னணி நடிகர்களின் படங்களை விசேஷ நாட்களில் மட்டும் வெளியிட வேண்டும் என்றெல்லாம் முந்தைய தயாரிப்பாளர் சங்கத்தில் திட்டம் கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு வாரமும் வெளிவரும் படங்களை முன்கூட்டியே திட்டமிடுதலும் சில மாதங்கள் நடந்தது. அதன்பின்னர், அவையெல்லாம் காணாமல் போய்விட்டது.
இந்த வருடத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படங்கள் வெளியாவதில் எந்த திட்டமிடலும் இல்லாமல் சிக்கல் தொடர்கிறது. கடந்த மூன்று வாரங்களாக மூன்று முக்கிய நடிகர்களின் படங்கள் வெளிவந்து தியேட்டர்களைத் தடுமாற வைத்துள்ளது.
செப்டம்பர் 20ம் தேதி சூர்யா நடித்த 'காப்பான்', செப்டம்பர் 27ம் தேதி சிவகார்த்திகேயன் 'நம்ம வீட்டுப் பிள்ளை', இன்று அக்டோபர் 4ம் தேதி தனுஷ் நடித்த 'அசுரன்' ஆகிய படங்கள் வெளிவந்தன. ஒரு வார இடைவெளியில் இப்படி அடுத்தடுத்து பெரிய படங்கள் வெளிவருவதால் அவை பிக்-அப் ஆகி ஓடுவதற்குக் கூட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. இவற்றுடன் போட்டிக்கு வரும் படங்களின் நிலைமைதான் படுமோசம். தியேட்டர்களும் கிடைக்காமல் கிடைத்த தியேட்டர்களில் கூட்டமும் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எப்போது விடிவு காலம் வருமோ என தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல தியேட்டர்காரர்களும் தவிக்கிறார்கள்

first 5 lakhs viewed thread tamil