Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[Image: _109097932_103f26b0-2598-4cc0-b54d-c69eb69282c1.jpg]படத்தின் காப்புரிமைV CREATIONS/கலைப்புலி எஸ். தாணு


திரைப்படம்
அசுரன்


நடிகர்கள்
தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டி.ஜே. அருணாச்சலம், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, பசுபதி, நரேன்;


இசை
ஜி.வி. பிரகாஷ்


இயக்கம்
வெற்றிமாறன்

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணைந்திருக்கும் நான்காவது படம். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் திரைவடிவம்தான் அசுரன்.
1960களில் நடக்கிறது கதை. தன் அண்ணனைக் கொலை செய்த வடக்கூரானை (ஆடுகளம் நரேன்) கொலை செய்கிறான் 15 வயதுச் சிறுவனான சிதம்பரம் (கென் கருணாஸ்). வடக்கூரானின் ஆட்களும் காவல்துறையும் தேட ஆரம்பிக்க, சிதம்பரமும் அவனது தந்தை சிவசாமியும் (தனுஷ்) காட்டுக்குள் தப்பிச் செல்கிறார்கள். மிகவும் பயந்தவராகவே தன் தந்தையை அறிந்திருந்த சிதம்பரத்திற்கு காட்டுக்குள் பதுங்கியிருக்கும்போதுதான் அவரது மறுபக்கம் தெரிகிறது. இந்தக் கொலை வழக்கிலிருந்தும் வடக்கூரான் குடும்பத்தின் பகையிலிருந்தும் சிதம்பரத்தின் குடும்பம் எப்படி மீள்கிறது என்பது மீதிக் கதை.
வெற்றி மாறனின் படங்களில் பெரும்பாலானவை தீராப் பகையையும் துரோகத்தையும் பழிவாங்குவதையும் மனம் திடுக்கிடும் வகையில் சொல்லிச் செல்பவை. இந்தப் படமும் அதேபோலத்தான். ஒரு நாவல் திரைப்படமாகும்போது, அதன் மையப் புள்ளியிலிருந்து விலகி, வேறொரு கதையாக மாறிவிடும். ஆனால், பூமணியின் வெக்கையை கிட்டத்தட்ட அதே உக்கிரத்துடன் திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.
ஒரு கொலையைச் செய்துவிட்டு சிதம்பரமும் சிவசாமியும் காட்டுக்குள் நுழைய, மெல்ல மெல்ல ஒரு கரிசல்காட்டு வாழ்க்கையை திரையில் விரிக்கிறார் வெற்றிமாறன். வெக்கை நாவலின் ஆசிரியரான பூமணி ஒரு முறை அந்த நாவலைப் பற்றிப் பேசும்போது, "கொலை செய்தது சிதம்பரம். காட்டுக்குள் திரிந்தது நான்" என்றார். இப்போது அந்தக் காட்டுக்குள் ரசிகர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார் வெற்றிமாறன். அவரது மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். ஏன் மிகச் சிறந்த படமாகக்கூட ஒருவர் கருதலாம்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 04-10-2019, 04:52 PM



Users browsing this thread: 3 Guest(s)