Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம்! - மணிரத்னம் உட்பட 49 பேர் மீது பாய்ந்த தேசத்துரோக வழக்கு[/color]

[color=var(--title-color)]சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் ஒன்றிணைந்து இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர்.[/color]
[Image: vikatan%2F2019-07%2F5f4478a6-7c68-46e9-9...2Ccompress][color=var(--meta-color)]மோடி[/color]
[color=var(--content-color)]இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் கூட்டு வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் ஒன்றிணைந்து இந்தக் கடிதத்தை எழுதினர். இது மிகப் பரவலாக இந்தியா முழுவதும் பேசப்பட்டது
. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள், நாட்டினுடைய நற்பெயரை கெடுப்பதாகவும், சிறப்பாக செயல்படும் பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை குறைத்து மதிப்பிடுவதாகவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
[color=var(--content-color)]இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நீதிபதி சூர்யகாந்த் திவாரி, இந்த மனுவை ஏற்றுக்கொண்டு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fdab97a9a-f0ed-44d2-8...2Ccompress][/color]
[/color]
[color=var(--content-color)]நீதிபதியின் உத்தரவை அடுத்து, பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா. பீகாரிலுள்ள சதார் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
``எதிர்ப்புக் குரல் இல்லாமல் ஜனநாயகம் செயல்பட முடியாது, எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை, `ஆன்டி நேஷனல்' (anti-national) என்றும், `அர்பன் நக்சல்' (urban naxal) என்றும் முத்திரை குத்துவது நியாயமற்றது. இந்திய அரசியலமைப்பு கருத்து சுதந்திரத்தை மக்களுக்கு வழங்குகிறது. அதைச் செயல்படுத்தும் குரல்களில் அரசுக்கு எதிரான எதிர்ப்புக் குரலும் அடக்கம்.
ஆட்சியில் இருக்கும் கட்சியை விமர்சிப்பது அல்லது எதிர்ப்பது என்பது நாட்டை எதிர்ப்பது ஆகாது. எந்த ஆளும் கட்சியும் இந்திய அரசாகாது. எனவே, ஆட்சிக்கு எதிராகப் பேசுவது, நாட்டை எதிர்ப்பதாகாது. இத்தகைய விமர்சனங்களை, எதிர்ப்புகளை பொதுவெளியில் அனுமதிக்கும் நாடு மட்டுமே ஒரு வலுவான நாடாக இருக்க முடியும்" - பிரபலங்கள் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை.
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 04-10-2019, 04:49 PM



Users browsing this thread: 98 Guest(s)