04-10-2019, 09:59 AM
"ரொம்ப ரொம்ப புடிக்கும்த்தான் அவளுக்கு..!! நம்ம பக்கத்து வீட்டுல ஒரு குட்டி ரோஸ் கார்டன் இருக்குது.. யெல்லோ ரோசஸ்..!! அக்கா மொட்டை மாடில நின்னுக்கிட்டு.. அந்த கார்டனையே வெறிச்சு வெறிச்சு பார்ப்பா..!! 'எவ்ளோ அழகா இருக்குல்லடி சுஜி.. நாமும் வளக்கனும்டி'னு ஆசையா சொல்லுவா..!!"
அவ்வளவுதான்..!! அடுத்த நாள் காலை.. சூரியன், சேவல், காக்கா, ஈ, எறும்பு, கொசு எல்லாம் விழிப்பதற்கு முன் நான் விழித்துவிட்டேன். கஷ்டப்பட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தேன். அடுத்த வீட்டு காம்பவுண்டு..!! அந்த மஞ்சள் ரோஜா தோட்டத்திற்குள் நுழைந்து ஐந்தே ஐந்து ரோஸ் பறித்துக்கொண்டேன். என் அறைக்கு வந்தேன். டேபிளில் பரப்பி, ஐந்தில் எது அழகாக இருக்கிறது என்று பார்த்தேன். ஐந்துமே அழகாக இருப்பது மாதிரி தோன்ற, கண்ணை மூடி தொட்டு, ஒன்று செலக்ட் செய்தேன். அதை பாலீத்தீன் பேப்பரில் வைத்து அழகாக சுருட்டினேன்.
அன்று காலை வசுவை வாலாஜா ரோட்டில் வைத்து வளைத்து பிடித்தேன். அந்த மஞ்சள் ரோஜாவை நீட்டினேன். அவளும் ஆசையாக வாங்கினாள். ஆனால் அடுத்த நிமிடமே அந்த ரோஜாவை என் முகத்தில் விட்டெறிந்தாள். நான் மறுபடியும் சுஜியிடம் ஓடிவந்தேன்.
"சுஜி.. அந்த ரோஸ் ஐடியா ஊத்திக்கிச்சு..!!"
"ஏன்த்தான்..? என்னாச்சு..?"
"அவளுக்கு கடைல வாங்குன ரோஸ்தான் புடிக்குமாம் சுஜி..!! பக்கத்து வீட்டு ரோஸ் புடிக்காதாம்.. ஓரமா மண்ணு ஒட்டிட்டு இருந்திருக்கு.. கண்டுபுடிச்சுட்டா..!!"
"என்னத்தான் சொல்றீங்க..? பக்கத்து வீட்டு ரோஸா..?" அவள் அதிர்ச்சியாய் கேட்டாள்.
"ஆமாம்.. நீதான சொன்ன.. உன் அக்காவுக்கு பக்கத்து வீட்டு ரோஸ் புடிக்கும்னு.. அதான் கஷ்டப்பட்டு சுவரேறி குதிச்சு.."
"அடத்தூ..!! யாராவது லவ்வருக்கு குடுக்குற ரோஸை.. திருடிக்கொண்டு போய் கொடுப்பாங்களா..?"
"என்ன சுஜி.. நீதான அது அவளுக்கு புடிக்கும்னு சொன்ன..?"
"அதுக்காக.. அதையேவா திருடி கொடுப்பீங்க..? நாளைக்கு உங்களுக்கு கல்யாணம் ஆனப்புறம்.. அக்கா வேற ஏதாவது பொம்பளையை பாத்து.. 'அவ கட்டிருக்குற ஸாரி நல்லாருக்குங்கனு சொன்னா..' அந்த பொம்பளை ஸாரியை அப்டியே உருவி அக்காட்ட கொடுத்துடுவீங்களா..?"
"ஆமால்ல..? தப்புல..?"
"இப்போதான் தப்புன்னு புரியுதா உங்களுக்கு..? வெளங்குன மாதிரிதான்..!! ஈசியான மேட்டரு.. இதைப்போய் சொதப்பிட்டு வந்துருக்கீங்களே..? அந்த ரோஸை கடைல போய் வாங்குனா.. மிஞ்சிமிஞ்சி போனா பத்து ரூபா இருக்குமாத்தான்..? காதலிக்காக அதுகூட செலவு பண்ண மாட்டீங்களா..?" அவள் கடுப்புடன் சொல்ல,
"ஓ.. பத்து ரூபா இருக்குமா.. அந்த ஒத்தை ரோஸ்..?" நான் நம்பமுடியாமல் கேட்டேன்.
"ஆமாம்.. நீங்க என்ன நெனச்சீங்க..?"
"இல்லை சுஜி.. உன் அக்கா என்மேல சந்தேகப்பட்டு.. அந்த ரோஸ் என்ன ரேட்டுன்னு கேட்டா..!!"
"ம்ம்.. என்ன சொன்னீங்க..?"
"ஒரு ரூபா.. அம்பது காசு சொன்னேன்..!!"
"உதைச்சாளா இல்லையா உங்களை..?"
"இல்லையே..? ஏன் கேக்குற..?"
"நானா இருந்தா உதைச்சுருப்பேன்..!!"
"என்ன சுஜி.." என்று நான் அவளை கொஞ்ச,
"என்ன நொன்ன சுஜி..?? போங்கத்தான்.. உங்களுக்கு இதுலாம் செட் ஆவாது..!! பேசாம நீங்க என்னை.." அவள் எரிச்சலாக சொன்னாள்.
"வெளையாடத சுஜி.. வேற ஏதாவது நல்ல ஐடியா இருந்தா சொல்லேன்...?"
"வேற என்ன..?? ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ஆங்..!! அவளுக்கு கவிதைன்னா.. ரொம்ப புடிக்கும்.. உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா..?"

first 5 lakhs viewed thread tamil