Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இந்தச் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடத்தப்படுவது ஏன்?
தமிழ்நாட்டில் இதுபோல இரு பெரும் தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறை. இந்தியாவின் வெளியுறவுத் துறை வரைபடத்தில் தமிழ்நாட்டிற்கு தற்போது முக்கியத்துவம் கொடுப்பதற்கு என்ன காரணம்? இந்திய வெளியுறவுத் துறை இது தொடர்பாக வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை.
[Image: _109096606_6367505c-72a2-4af7-8f36-fb2a9693cf6c.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionகோப்புப்படம்
இதற்கு முன்பாக கடந்த 2018 ஏப்ரல் மாதம் 27-28ஆம் தேதிகளில் ஹுபெயில் பிரதமர் நரேந்திர மோதியும் ஜீ ஜிங்பிங்கும் சந்தித்துப் பேசினர். 2017ல் டோக்லாமில் ஏற்பட்ட மோதல் நிலைக்குப் பிறகு, இந்தச் சந்திப்பின்போதுதான் இரு தரப்பு உறவுகள் சீரடைந்தன. ஹுபெய் சந்திப்பிற்குப் பிறகு, இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவது இப்போதுதான்.
தற்போது இந்தியாவைப் பொறுத்தவரை சார்க் நாடுகளைவிட வங்காள விரிகுடா கடலை ஒட்டியுள்ள நாடுகளில் கவனம் செலுத்த விரும்புகிறது. மேலும் வங்காள விரிகுடாக் கடலில் தன் ஆதிக்கத்தைக் காண்பிக்கவும் விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாகவே வங்கக் கடலை ஒட்டிய பகுதியை பேச்சுவார்த்தைக்குத் தேர்வுசெய்திருக்கிறது. இதற்கு முன்பாக இங்கு நடந்த டிஃபன்ஸ் எக்ஸ்போ, தமிழகத்தில் அமைக்கத் திட்டமிட்டிருந்த டிஃபன்ஸ் காரிடார் ஆகியவை இதனையே சுட்டிக்காட்டுகின்றன" என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் புதிய வல்லரசு சீனா நூலின் ஆசிரியருமான ஆழி. செந்தில்நாதன்.
ஆனால், இந்தக் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். "இது முழுக்க முழுக்க அரசியல். தமிழகத்தை எப்படியாவது கவர நினைக்கிறது பா.ஜ.க. அதன் ஒரு பகுதிதான் இது. செல்லும் இடங்களில் எல்லாம் பிரதமர் தமிழில் பேசவதும், தமிழைப் புகழ்வதும் அதற்காகத்தான். மற்றபடி ராஜதந்திர ரீதியாக இந்தச் சந்திப்பை தமிழ்நாட்டில் நடத்த எந்த முக்கியத்துவமும் இல்லை" என்கிறார் ராதாகிருஷ்ணன்.
இந்தியா வங்கக் கடலில் தன் ஆதிக்கத்தை காட்ட நினைத்தால் கடற்படைத் தலைமையகம் உள்ள விசாகப்பட்டினத்தில் இதை நடத்தியிருக்கலாம். பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்துவதற்கே வட மாநிலங்களில் எதிர்ப்பு இருக்கும் என்பதால், தென்னிந்தியாவில் நடத்தலாம். இதுபோன்ற காரணங்கள் ஏதுமே இல்லாமல் இங்கு நடத்தப்படுவது, தமிழகத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று காட்டவே என்கிறார் ராதாகிருஷ்ணன்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 04-10-2019, 09:47 AM



Users browsing this thread: