Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
வராக மண்டப குடைவரை:
இங்குள்ள வராக மண்டப குடைவரைக் கோவில், அற்புதமான சிற்பங்களைக் கொண்டது. இங்கு வராக மூர்த்தியின் சிற்பம் உள்ளதால் இது வராக மண்டபக் குடைவரை என்று அழைக்கப்பட்டாலும் நரசிம்மருக்காக அமைக்கப்பட்டது என்ற கருத்தும் உண்டு.
[Image: _109089067_mamalapuram.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இரண்டு முழுமையான தூண்களும் சுவற்றோடு ஒட்டிய இரண்டு அரைத் தூண்களும் இங்கே உண்டு. இங்குள்ள கருவறை உள்நோக்கி இருக்காமல், துருத்திக்கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மண்டபத்தின் வடக்குச் சுவரில் பூமா தேவியைத் தாங்கி நிற்கும் வராகமூர்த்தியின் சிற்பம் காணப்படுகிறது.
அர்ச்சுனன் தபசு புறவழி புடைப்புச் சிற்பம்:
அருச்சுனன் தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் மிகப் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி இங்குள்ள தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. சுமார் முப்பது மீட்டர் வரை உயரமும் சுமார் 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சிற்பத் தொகுதி அர்ச்சுனன் தபசு என்று பாகீரதன் தவம் என்றும் இருவேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.
ரதக் கோவில்கள்:
பொதுவாக பஞ்ச பாண்டவர் ரதக் கோவில்கள் என்று அழைக்கப்படும் இந்தக் கோவில்கள், நிலத்தில் துருத்திக்கொண்டிருந்த பாறைகளைச் செதுக்கி ஒரே வரிசையில் அமைக்கப்பட்ட கோவில்களாகும். மகாபாரதத்தின் முதன்மைப் பாத்திரங்களுக்காக அமைக்கப்பட்ட கோவில்கள் என பலர் கூறினாலும், அவர்களது உருவங்கள் இல்லாததால், சிவன், திருமால், கொற்றவை ஆகியோருக்காக அமைக்கப்பட்ட கோவில்கள் என்றும் இவற்றைக் கூறுவதுண்டு. ஒவ்வொரு கோவிலும் வெவ்வேறுவிதமான பாணியில் அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கோவில் தொகுதியின் சிறப்பு.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 04-10-2019, 09:45 AM



Users browsing this thread: 59 Guest(s)