Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
நரேந்திர மோதி - ஷி ஜின்-பிங் சந்திப்பு: மாமல்லபுரத்தில் நடப்பதற்கு காரணம் என்ன?

[Image: _109089064_mamallapuram.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்திய பிரதமர் நரேந்திரமோதியும், சீன அதிபர் ஷி ஜின் பிங்கும் அக்டோபர் 11-13ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர். இந்தச் சந்திப்பிற்கு மாமல்லபுரம் ஏன் தேர்வுசெய்யப்பட்டது?
சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் சென்றால் 62 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது மாமல்லபுரம். பல்லவர் காலத்தைச் சேர்ந்த யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களான குடைவரைக் கோவில்கள், ஒற்றைக் கல் ரதம், அற்புதமான புடைப்புச் சிற்பங்களுக்குப் பெயர்போன மாமல்லபுரம், தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.
மாமல்லபுரத்தில் எங்கே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும், எந்தெந்த இடத்தை முக்கியப் பிரமுகர்கள் பார்வையிடுவார்கள் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இருந்தபோதும் கடற்கரைக் கோவில்கள், அர்சுனன் தபசுச் சிற்பம், கிருஷ்ணரின் வெண்ணை உருண்டை ஆகியவற்றை அவர்கள் பார்வையிடக்கூடும் எனத் தெரிகிறது. இதற்கேற்றபடி, அர்ஜுனன் தபசு சிற்பத்தை ஒட்டி நடந்துவந்த பராமரிப்புப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்படுத்தப்பட்டுவருகின்றன. 16.5 சதுர கி.மீ. பரப்புள்ள அந்த ஊர் முழுவதும் சாலைகள் சீரமைக்கப்பட்டுவருகின்றன. அந்த ஊரில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
[Image: _109093301_gettyimages-970696042-1.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
மாமல்லபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. கடலில் அலைச்சறுக்கு விளையாட்டிற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் 4ஆம் தேதியிலிருந்தே கடலுக்குச் செல்ல வேண்டாமெனக் கூறப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியே சீனத் தூதரக அதிகாரிகள் மகாபலிபுரத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் புதன்கிழமையன்று மாமல்லபுரம் சென்று அங்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்துள்ளன. இது தொடர்பான விரிவான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமையன்று சென்னையில் நடக்கவிருக்கிறது.
மாமல்லபுரம்
ஒரு சுற்றுலாப் பயணியாகவும் வரலாற்றில் ஆர்வமுடையவராகவும் செல்வோருக்கு மாமல்லபுரத்தில் பார்ப்பதற்கு நிறையவே உண்டு.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 04-10-2019, 09:44 AM



Users browsing this thread: 98 Guest(s)