Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற புறநானூற்றுப் பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. மனிதரை மதிக்கக்கூடிய அக்கால மக்களின் வாழ்வை இந்த பாடல் உணர்த்துவதாகவும் தெரிவித்தார்.
[Image: _108973990_2c68d079-bb75-4605-a184-ab5096a59663.jpg]
அறிவியல் கருத்துகளை எதார்த்தமாக உள்வாங்கி கொண்டு வாழ்ந்த சமூகமாக 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த சமூகத்தின் அடிப்படை இருந்திருக்கிறது என்றால், இந்த காலத்திற்கு பின்னர் வாழ்ந்தவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிய, இந்த கீழடி கண்டுபிடிப்பு ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று கனிமொழி தெரிவித்தார்.
இந்த பொதுநல வழக்கில் பெரிய தடைகளை எல்லாம் சந்திக்கவில்லை என்று தெரிவித்த அவர், இந்த வழக்கை மதுரையில் தொடர வேண்டியிருந்தது என்பதால், கடைசி நேரத்தில் அடுத்த நாள் வழக்கு விசாரணைக்கு வருவது தெரியவந்தபோது, அன்றைய நாளில் சரியாக ஆஜராவதில் சில சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்தார் கனிமொழி.
ஆனால், இந்த பொதுநல வழக்கு ஒரு நாள் கூட பாதிப்பு இல்லாமல் நடைபெற வேண்டும். தனிப்பட்ட வழக்குகள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, ஒருநாள் கூட ஆஜராகாமல் இந்துவிட கூடாது என்பதில் தான் மிகவும் கவனமாக இருந்ததாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் ஏதாவது சிக்கல் என்றால், அது தனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே பாதிப்பு என்பதால் ஒவ்வொரு நாளும் சரியாக இந்த வழக்கில் ஆஜரானதாக கூறினார் கனிமொழி.
மதுரையில் தனக்கு முத்துமணி என்ற வழக்கறிஞர் உதவியதாகவும் அவர் கூறினார்.
[Image: _108973991_eb2c7bf1-4555-4c2d-8f3c-d86b7813ed8d.jpg]
"மத்திய தொல்லியல் துறை எங்கு அகழ்வாராய்ச்சி செய்தாலும், அறிக்கை வெளியிடுவதில்லை. ஆதிச்சநல்லூரில் இந்த நிலைதான் ஏற்பட்டது. மாநில அரசு தமிழகத்திலுள்ள பல இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்தி, வரலாற்று புதையல்களை வெளிக்கொணர செய்வதே தனது நோக்கம்," என்கிறார் வழக்கறிஞர் கனிமொழி மதி.
யார் இந்த கனிமொழி மதி?
திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள தேவத்தூர் கிரமத்தை சேர்ந்தவர் கனிமொழி மதி. எட்டாம் வகுப்பு வரை அதே கிராமத்தில் பயின்றுவிட்டு, 12ம் வகுப்பு வரை திண்டுக்கல்லில் கல்வி கற்றுள்ளார்.
[url=https://www.youtube.com/watch?v=y7du4Vqzd_o][/url]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 04-10-2019, 09:42 AM



Users browsing this thread: 104 Guest(s)