Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
நம்ம வீட்டுப் பிள்ளை: சினிமா விமர்சனம்

[Image: _108994383_a1e15066-f518-4e8d-803e-47110c94aff1.jpg]படத்தின் காப்புரிமைTWITTER


திரைப்படம்
நம்ம வீட்டுப் பிள்ளை


நடிகர்கள்
சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சூரி, யோகிபாபு, நட்டி, ஆர்.கே. சுரேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அர்ச்சனா, வேல ராமூர்த்தி, சண்முகராஜா


பின்னணி இசை
டி. இமான்


இயக்கம்
பாண்டிராஜ்

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களுக்குப் பிறகு, இயக்குனர் பாண்டிராஜும் சிவகார்த்திகேயனும் ஒன்றுசேர்ந்திருக்கும் மூன்றாவது படம் நம்ம வீட்டுப் பிள்ளை. வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், சிவகார்த்திகேயன் மிகவும் எதிர்பார்த்திருந்த படம் இது.
பெரியவர் அருள்மொழி வர்மனின் (பாரதிராஜா) பேரன் அரும்பொன் (சிவகார்த்திகேயன்). தந்தை சின்ன வயதிலேயே இறந்துவிட, தாய் மற்றும் தாத்தாவால் வளர்க்கப்படுகிறார் அரும்பொன். இவருடைய தங்கை துளசி (ஐஸ்வர்யா ராஜேஷ்). அருள்மொழி வர்மனின் மற்ற மகன்கள் அரும்பொன்னின் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். ஆனால், துளசியின் திருமணத்தில் ஏற்படும் பிரச்சனை, அரும்பொன்னை பெரும் சிக்கலில் தள்ளுகிறது. அதிலிருந்து மீண்டு, தன் தங்கையின் வாழ்வை எப்படி காப்பாற்றுகிறார் அரும்பொன் என்பது மீதிக் கதை.
கிட்டத்தட்ட கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்ப்பதுபோல இருக்கிறது. பெரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் இருக்க அவர்களையெல்லாம் ஒன்றிணைக்கும் இளைஞனுக்கு என்னென்ன அவமானங்கள் அந்தப் படத்தில் வந்ததோ, அதே அவமானங்கள் இந்தப் படத்திலும் கதாநாயகனுக்கு ஏற்படுகின்றன. அந்தப் படத்தில் முடிவின் கதாநாயகன் ஒரு நீண்ட வசனத்தின் மூலம் உறவினர்களை எப்படி திருத்தி, மனமாற்றம் செய்வாரோ அதேபோலத்தான் இந்தப் படத்திலும். அந்தப் படத்தில் இருந்த சூரி இந்தப் படத்திலும் இருக்கிறார். இதனால் பல தருணங்களில் ஏற்கனவே பார்த்த படத்தைப் பார்ப்பதுபோலவே இருப்பது இந்தப் படத்தின் மைனஸ்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 04-10-2019, 09:39 AM



Users browsing this thread: 3 Guest(s)