Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
Joker - சினிமா விமர்சனம்

[Image: _109089060_maxresdefault.jpg]படத்தின் காப்புரிமைWARNER BROS
டிசி காமிக்ஸின் பேட்மேன் கதைகளில் வில்லனாக வரும் ஜோக்கரை பிரதான பாத்திரமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் இது.
பேட்மேன் படங்களில் எந்த நோக்கமும் இல்லாமல், எங்கிருந்து வந்தான் எனத் தெரியாமல் வில்லத்தனம் செய்யும் ஜோக்கர் பாத்திரத்திற்கு, ஒரு பின்னணியைக் கொடுக்கிறது இந்தப் படம்.
1981ஆம் ஆண்டு. கோதம் நகரம். பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது நகரம். இந்த ஊரில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஆர்தர் ஃப்ளெக் (ஜாக்வின் ஃபோனிக்ஸ்) தன் தாயுடன் வசித்துவருகிறான். சம்பந்தமில்லாத தருணங்களில் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் பிரச்சனையும் ஆர்தருக்கு இருக்கிறது.


திரைப்படம்
Joker

நடிகர்கள்
ஜாக்வின் ஃபோனிக்ஸ், ராபர்ட் டி நீரோ, ஜாஸி பீட்ஸ், ஃப்ரான்செஸ் கான்ரே;

இயக்கம்:
டாட் ஃபிலிப்ஸ்

ஒரு மிகப் பெரிய 'ஸ்டாண்ட் - அப்' காமெடியனாக வரவிரும்பும் ஆர்தருக்கு கிடைப்பதென்னவோ, கடைகளுக்கு வெளியில் நின்று வாடிக்கையாளர்களை அழைக்கும் வேலைதான். அதிலும் சில சமயம் அடிவாங்க நேர்கிறது. விரக்தியும் நிராசையும் மிகுந்த வாழ்வை நடத்திக்கொண்டிருக்கும் ஆர்தர், ஒரு தருணத்தில் தாங்க முடியாமல் மூன்று கொலைகளைச் செய்துவிடுகிறான்.
அதைத் தொடர்ந்து கோதம் நகரில் நடக்கும் போராட்டம், ஆர்தருக்கு தன் வாழ்க்கை குறித்து தெரியவரும் உண்மைகள் ஜோக்கரின் எதிர்காலத்தையே மாற்றிவிடுகின்றன
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 04-10-2019, 09:30 AM



Users browsing this thread: 2 Guest(s)