15-01-2019, 10:24 AM
விரிவாக்கப்பட்ட சென்னை நகருக்கான ஒரு நாள் குடிநீர்த் தேவை அதிகபட்சமாக 1,200 மில்லியன் லிட்டரும் குறைந்த பட்சமாக 830 மில்லியன் லிட்டராகவும் இருக்கிறது.
இவற்றில் 50 சதவீத நீர் ஏரி, குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்களில் இருந்து கிடைக்கிறது. 25 சதவீதம் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளில் இருந்து கிடைக்கிற
மீதமுள்ள 25 சதவீதம் நிலத்தடி நீரிலிருந்து பூர்த்திசெய்யப்படுகிறது. ஏரி, குளங்கள் வற்றும்போது நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பது அதிகரிக்கிறது.
சென்னை நகரிலும் நகரைச் சுற்றியும் அமைந்துள்ள ஏரிகளில் ஒட்டுமொத்தமாக 11 டிஎம்சி தண்ணீரைச் சேமித்துவைக்க முடியும்.
ஆனால், சென்னை நகரின் ஒரு வருட நீர்த் தேவையே 12 டிஎம்சியாக இருக்கிறது. மழை பொய்த்துப்போகும் வருடங்களில் நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பதும் சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து தண்ணீரை லாரிகளைக் கொண்டுவருவதும் வெகுவாக அதிகரிக்கும்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இரு ஆண்டுகளுக்கு முன்பாக இதே போல வறட்சி ஏற்பட்ட போது, சென்னையைச் சுற்றியுள்ள குவாரிகளில் தேங்கியிருந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு, அவை மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், பயன்பாட்டில் இல்லாமல் இருந்த பல ஏரிகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன.
ஆனால், குவாரிகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மிகக் குறைவு என்பதால் தொடர்ந்து நீர் ஆதாரங்களைத் தேட வேண்டிய தேவை சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டில் இப்படி ஒரு யோசனையை அதிகாரிகள் முன்வைத்தனர்