Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
வறண்ட ஏரிகள் - கழிவு நீரிலிருந்து குடிநீர் - புதுமையான தீர்வை எதிர்நோக்கும் சென்னை
[Image: _105184578_fdb90898-88d5-45fe-8c4c-73712732f392.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் தேவை அதிகரித்துவரும் நிலையில், மழை பொய்த்துப் போகும் ஆண்டுகளில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது குடிநீர் வாரியம். இந்த நிலையில், கழிவுநீரை மிகத் தூய்மையாகச் சுத்திகரித்து விநியோகிப்பது ஒரு தீர்வாக அமையக்கூடும்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் பருவமழை சரியாகப் பெய்யாத நிலையில், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் அனைத்துமே வறண்டுபோயுள்ளன.
இந்த ஆண்டு மட்டுமல்லாமல், பெரும்பாலான வருடங்களில் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும் சென்னைக் குடிநீர் வாரியம், நகரின் கழிவுநீரைச் சுத்திகரித்து சோதனை முறையில் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடக்குமானால், அடுத்த ஆண்டு இந்தக் குடிநீர் விநியோகம் துவங்கலாம்.
முதற்கட்டமாக, நெசப்பாக்கத்திலும் பெருங்குடியிலும் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுவதற்கான பணிகளை குடிநீர் வாரியம் துவங்கியுள்ளது.
[Image: _105175160_fb6472ae-284e-470d-baad-edd6aafecbfa.jpg]படத்தின் காப்புரிமைAFP
ஒவ்வோர் இடத்திலும் ஒரு நாளைக்கு தலா 10 மில்லியன் லிட்டர் கழிவு நீர் குடிப்பதற்கான தகுதியான வகையில் சுத்திகரிக்கப்படும்.
சென்னை நகரைப் பொறுத்தவரை தற்போது ஆறு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கிவருகின்றன. இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஒரு நாளைக்கு மொத்தமாக 727 மில்லியன் லிட்டர் நீரைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டவை.
கழிவுநீரைச் சுத்திரித்து பயன்படுத்துவது சென்னை குடிநீர் வாரியத்திற்கு புதிதல்ல. "இந்தியாவிலேயே முதன் முதலில் கழிவுநீரைச் சுத்திகரித்து விநியோகிக்க ஆரம்பித்தது சென்னைக் குடிநீர் வாரியம்தான்" என்கிறார் அங்கு பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர்.
1980களின் இறுதியிலேயே கழிவுநீரைச் சுத்திரித்து தொழிற்சாலை பயன்பாட்டிற்காக சிபிசிஎல், எம்எஃப்எல் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கியது குடிநீர் வாரியம். தற்போதும் இதுபோல பல நிறுவனங்களுக்கு கழிவுநீர் இருகட்டங்களாகச் சுத்திகரித்து வழங்கப்பட்டுவருகிறது
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 15-01-2019, 10:23 AM



Users browsing this thread: 87 Guest(s)