Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாக கூறும் நீங்கள் ஏன் குஜராத் தேர்தலின் போது திருநீறு அணிந்து கோயிலுக்கு சென்றீர்கள், காஷ்மீருக்கு சென்ற போது குல்லா அணிந்தீர்கள். இது ஏன்? என்று அந்த சிறுமி கேட்டதாகவும், அதற்கு ''அனைத்து மதத்தினரும் சமம் என்பதை உணர்த்தவே எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறேன். சமத்துவ இந்தியாவை உருவாக்குவதே நோக்கம்,'' என்று ராகுல் கூறியதாகவும் விவரிக்கிறது அந்த செய்தி.
[Image: _105170373_253cb7a1-cf2a-49f6-8520-9faf5520110a.jpg]படத்தின் காப்புரிமைDINAKARAN
சிறுமி, "இந்தியாவில் 80 சதவீத ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையை இனி எப்படி செய்வீர்கள்?" இதைக் கேட்டவுடன் ராகுலின் முகம் மாறியது. சிரித்த முகமாகவே இருந்தார்.மேலும் அந்த சிறுமி, 'நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்த பின்தான் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இனியாவது நீங்கள் 'மதவாதம்' என பிரசாரம் செய்யாமல் 'ஊழல் இல்லாத இந்தியா' என ஓட்டு கேளுங்கள். இந்திய மக்கள் சிந்திப்பர்' என்றார்.
சிறுமியின் பேச்சை பார்வையாளர்கள் பாராட்டினர்.இதற்கிடையே சிறுமியின் துடுக்கான கேள்விகளை தொடர்ந்து, இந்நிகழ்ச்சிக்கான நேரலை ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது.
இவ்வாறாக செய்தி வெளியிட்டுள்ளது தினமலர் நாளிதழ்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 15-01-2019, 10:18 AM



Users browsing this thread: 93 Guest(s)