15-01-2019, 10:13 AM
![[Image: _105175071_whatsappimage2019-01-14at1.10.25pm-2.jpg]](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/42A1/production/_105175071_whatsappimage2019-01-14at1.10.25pm-2.jpg)
புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.காலை 8 30 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஆட்சியர் கணேஷ் ஆகியோர் ஜல்லிகட்டு உறுதி மொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.பின்னர், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தார்
இந்த போட்டியில் 453 காளைகளும் 120க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டது.
![[Image: _105175073_whatsappimage2019-01-14at1.10.25pm-1.jpg]](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/90C1/production/_105175073_whatsappimage2019-01-14at1.10.25pm-1.jpg)
வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்து வர அதனை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்