Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
புதுக்கோட்டையில் அடங்க மறுத்த காளைகளை அடக்கிய காளையர்கள்

[Image: _105175069_whatsappimage2019-01-14at1.10.24pm.jpg]
தமிழ்நாட்டில் அரசின் அனுமதி பெற்று நடைபெறுகின்ற 2019ம் ஆண்டின் முதல் ஜல்லிகட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப் பாய்ந்து வந்த 453 காளைகளை 100ற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர்.ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் நடத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக 2019 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு அரசாணை வெளியான நிலையில் நடக்கும் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 15-01-2019, 10:12 AM



Users browsing this thread: 82 Guest(s)