Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது தாக்குதல் - போலீஸ்காரர்கள் கைது

நெல்லை அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கிய போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டக்டரை போலீஸ்காரர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



[Image: 201909301454229011_security%20officermen-a...SECVPF.gif]
போலீஸ்காரர்கள் - கண்டக்டர்
[color][size][font]

நெல்லை:

நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று மாலை ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சில் நாகர்கோவிலை சேர்ந்த ரமேஷ்(வயது50) என்பவர் கண்டக்டராக இருந்தார்.


அந்த பஸ்சில் பாளை ஆயுதப்படை போலீசார் தமிழரசன், மகேஸ்வரன் ஆகிய இருவரும் கைதி ஒருவரை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் வாரண்ட் தருமாறு கண்டக்டர் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் வாரண்டை கொடுக்கவில்லை.

மூன்றடைப்பு பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது போலீஸ்காரர்களில் ஒருவர் கண்டக்டரை சரமாரியாக தாக்கினார். இதில் கண்டக்டருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

இதனை பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கண்டக்டர் ரமேஷ் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தான் தாக்கப்பட்டது குறித்து மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்கள் மீது கண்டக்டர் ரமேஷ் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி விசாரணை நடத்தி போலீஸ்காரர்கள் தமிழரசன் மற்றும் மகேஸ்வரன் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தார்.

பின்பு போலீஸ்காரர்கள் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கண்டக்டர் ரமேஷ் மீது போலீஸ்காரர்களும் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் கண்டக்டர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

இந்நிலையில் கண்டக்டரை போலீஸ்காரர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 03-10-2019, 09:39 AM



Users browsing this thread: 92 Guest(s)