02-10-2019, 08:28 PM
"என்ன வசு நீ..? நான்தான் அதுலாம் பொய்ன்னு சொல்றேன்ல..?"
"எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை.. நேத்து நீங்க பொறுக்கி மாதிரி பேசுனிங்களே.. அதுதான் ரியலா இருந்தது..!! இப்போ நல்லவன் மாதிரி பேசுறது ரியலாவே இல்லை..!! கேன்சல் பண்ணினது கேன்சல் பண்ணினதுதான்..!! நீங்க கெளம்பலாம்..!!" அவள் கேஷுவலாக சொல்ல, எனக்கு கோபம் வந்தது. கத்தினேன்.
"என்னடி.. சும்மா சும்மா.. கேன்சல் பண்ணிட்டேன்.. கேன்சல் பண்ணிட்டேன்னு.. கெடந்து குதிக்கிற..? நீயா லவ் பண்ணுவ..!! அப்புறம் நீயா அதை கேன்சல் பண்ணிடுவியா..? நடுவுல நான் ஒருத்தன் இருக்குறேன்டி.. என்னைக்காவது என்கிட்டே வந்து ஐ லவ் யூ அத்தான்னு சொல்லிருக்கியா..?"
"அறிவில்லாம பேசாதீங்கத்தான்.. ஒரு பொண்ணு கொஞ்சம் கூட வெக்கமில்லாம.. உங்ககிட்ட வந்து அப்டி சொல்வாளா..? சாடைமாடையாத்தான் சொல்வா..!! நீங்கதான் புரிஞ்சுக்கணும்..!!"
"சரி.. சாடைமாடையா என்னத்த சொல்லிட்ட நீ..?"
"நெறைய சொல்லலாம்..!! இப்போ ரீசண்டா நடந்ததை சொல்றேன்.. அன்னைக்கு நீங்க ஊர்ல இருந்து வந்தப்போ.. சுஜி மேல கை போட்டீங்களே..? நான் தட்டிவிட்டனே..? ஏன்..? அவ என் தங்கச்சின்ற பாசமா..? இல்லவே இல்லை..!! நான் விரும்புற ஆளு.. இன்னொரு பொண்ணு மேல கை போடுறான்னு ஆத்திரம்..!! அன்னைக்கு என் ரூமுக்கு வந்து என் செல்நம்பர் என்னனு கேட்டப்போ.. எவ்ளோ சந்தோஷப்பட்டேன் நான்..?? அதை புரிஞ்சுக்க முடியலை உங்களுக்கு..? என்னை ஃபால்லோ பண்ணி மாட்டுனிங்களே..? 'எதுவா இருந்தாலும் சொல்லுங்கத்தான்.. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்னு..' எவ்ளோ ஏக்கமா சொன்னேன்..? அந்த ஏக்கம் உங்களுக்கு புரியலை..? நேத்து..!! நேத்து நீங்க வந்து தனியா பேசணும்னு சொன்னப்போ.. உங்க லவ்வைத்தான் சொல்லப் போறீங்கன்னு.. என் மூஞ்சிலாம் எப்டி ப்ரைட் ஆச்சு..? அதுகூடவா உங்களுக்கு புரியலை..?"
"இப்போ எனக்கு புரியுது வசு.. அப்போ அதுலாம் புரியவே இல்லை..!! இதெல்லாம் வச்சு.. நீ என்னை லவ் பண்றேன்னு.. நானா எப்டி ஒரு முடிவுக்கு வர்றது..? எல்லாமே நீ கேஷுவலா கூட பண்ணிருக்கலாம்ல..?"
"சரித்தான்..!! எல்லாத்தையும் விடுங்க..!! சின்ன வயசுல இருந்தே.. உங்களை பாக்குறப்போலாம்.. அவ்ளோ ஆசையா.. அவ்ளோ ஏக்கமா பார்ப்பனே..? அந்த பார்வைக்கு கூட உங்களுக்கு அர்த்தம் புரியலையாத்தான்..?"
"எது...? ஷகீலா மாதிரி கண்ணை சொருகிட்டு.. ஒரு பார்வை பாப்பியே.. அதா..? சரக்கடிச்சா கூடத்தான்.. கண்ணு அந்த மாதிரி சொருகிக்கும்.. அதெல்லாம் நான் எப்டி லவ்வுன்னு கண்டுபிடிக்கிறது..?"
அவ்வளவுதான்..!! வசு பயங்கர கடுப்பானாள்..!! பட்டென்று பெஞ்சில் இருந்து எழுந்து கொண்டாள். கை ரெண்டையும் நீட்டி, என் கழுத்தை நெரிப்பது மாதிரி கொண்டு வந்தாள். கோபமும் எரிச்சலும் கொப்பளிக்கும் குரலில் கத்தினாள்.
"உங்களை…????? உங்களைலாம் என்ன பண்றதுன்னே தெரியலைத்தான்..!! உங்களை போய் லவ் பண்ணினேன் பாருங்க.. என் புத்தியை செருப்பால அடிக்கணும்..!! உங்களுக்கு ஒரு எழவும் புரிய வேணாம்..!! அப்டியே கெளம்புங்க.. இனிமே இந்த மாதிரி வந்து என்னை டார்ச்சர் பண்ணாதீங்க..!!" சொல்லிவிட்டு அவள் விடுவிடுவென நடையை கட்ட, நான் பதறிப்போய் அவளை ஃபால்லோ செய்தேன்.
"வசு.. வசு.. நில்லு வசு..!! நான் உன்மேல உயிரையே வச்சிருக்கேன் வசு..!! சின்ன வயசுல இருந்தே.. எனக்கும் உன்மேல கொள்ளை ஆசை..!! கட்டிக்கிட்டா உன்னைத்தான் கட்டிக்கனுன்னு நெனப்பேன்..!! அப்புறம் நீங்க மெட்ராஸ் வந்து.. கார், பங்களான்னு வசதியாயிட்டீங்க..!! உனக்குலாம் என்னை புடிக்காதுன்னு..."
"யார் சொன்னா..?" வசு திரும்பி கோபமாக கேட்டாள்.
"யாரும் சொல்லலை.. நானா மனசுக்குள்ள அந்த மாதிரி நெனச்சுக்கிட்டேன்..!! இப்போ சொல்றேன் வசு..!! எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அது உன் கூடத்தான்..!!"
"மறந்துடுங்கத்தான்.. இனிமே அதெல்லாம் நடக்காது..!!"
"ஏன் நடக்காது..? நான் போய் அத்தைட்ட பேசுறேன்.."
"போங்க.. போய் பேசுங்க.. கூலிப்படையை செட் பண்ணி.. உங்களை போட்டுத் தள்ளுராளா இல்லையான்னு பாருங்க..!! இத்தனை நாளா நீங்க உயிரோட இருந்ததுக்கு காரணமே நான்தான்..!! இவ்ளோ நாளா அம்மா மட்டுந்தான்.. இப்போ போய் சொன்னீங்கன்னா.. அந்த மில்லு ஓனரும் அம்மா கூட சேந்துக்குவான்..!!"
"எனக்கு எவன் வந்தாலும் கவலை இல்லை.. ரெண்டுல ஒன்னு பாக்க நான் ரெடியா இருக்கேன்..!! நீ மட்டும் என்பக்கம் இருந்தா போதும் வசு..!!"
நான் அந்தமாதிரி பரிதாபமாக சொன்னதும் வசு நின்றாள். என் முகத்தை ஒரு கணம் காதலாய் ஒரு பார்வை பார்த்தாள். அப்புறம் அமைதியாக சொன்னாள்.
"சொன்னா கேளுங்கத்தான்..!! நான் வேற இப்போ.. கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்.. இனிமே அவங்க நம்மளை சேர விடமாட்டாங்க..!! எல்லாம் முடிஞ்சு போச்சு..!! நீங்க ஊருக்கு கெளம்புங்க..!!"
"அப்போ.. நீ என்னை லவ் பண்ணினது..?"
"அதான் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு சொல்றன்ல..?"
"ஓஹோ..? முடிஞ்சு போச்சா..? முடிஞ்சு போனதை.. மறுபடியும் எப்டி ஆரம்பிக்க வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்..!!" நான் சீரியஸாக சொல்ல,
"ஓ.. என்ன பண்ண போறீங்க..?" அவள் கிண்டலாக கேட்டாள்.
"உன்னை மறுபடியும் என்னை லவ் பண்ண வைக்க போறேன்..!!"
"ஹாஹாஹா..!! காமடி பண்ணாதீங்கத்தான்.. ஊருக்கு போய் சேர்ற வழியை பாருங்க..!!"
அவள் நக்கலாக சொல்லிவிட்டு, விடுவிடுவென நடந்து கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்துகொண்டாள். நான் ரொம்ப நேரம் நடுரோட்டில் பித்துப்பிடித்தவன் மாதிரி நின்றிருந்தேன். சவால் விட்டாயிற்று..!! இப்போது அவளை காதலிக்க வைக்க வேண்டும். நமக்குத்தான் அந்த கருமாந்திரத்தை பற்றி ஒரு எழவும் தெரியாதே..?? என்ன செய்வது..?? பட்டென்று என் மூளையில் ஒரு மின்னல். சுஜி..!!!!

first 5 lakhs viewed thread tamil