screw driver ஸ்டோரீஸ்
"ஸாரி வசு.. உனக்கு என்னை புடிக்கும்ல..? ஸாரி.. ஸாரி.. தெரியாம சொல்லிட்டேன்..!!"

"ம்ம்ம்.. அப்புறம் எதுக்கு பொம்பளை பொறுக்கின்னு.. பொய் சொன்னீங்க..?"

"நீ யாரை லவ் பண்றேன்னு தெரிஞ்சுக்கத்தான்.."

"நான் உங்களைத்தான லவ் பண்றேன்..? அதை தெரிஞ்சுக்க எதுக்கு.. நீங்களே பொறுக்கின்னு பொய் சொன்னீங்க..?"

"ஐயோ.. உனக்கு புரியலை வசு..!! நீ லவ் பண்றவனை கண்டுபுடிச்சு.. அவன் கையை காலை முறிக்கிறதுக்கு..? அதுக்காகத்தான் நான் மெட்ராஸே வந்தேன்..!!"

"என்னத்தான் லூசு மாதிரி பேசுறீங்க..? நீங்களே எப்படி உங்க கையை காலை முறிச்சுக்க முடியும்..?"

"யாரு..? நான் லூசு மாதிரி பேசுறனா..? நீதாண்டி லூசு மாதிரி பேசுற..!! இரு.. உனக்கு ஆரம்பத்துல இருந்து சொல்றேன்..!!"

நான் வசுவிடம் ஒவ்வொன்றாக சொன்னேன். போனவாரம் அத்தை ஊருக்கு வந்தது.. வசுவின் காதலை பிரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டது.. நான் மெட்ராஸ் வந்து.. அவளுடைய காதலனை கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள்.. எல்லாம் சொன்னேன்..!! வசு எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டாள். அப்புறம் அமைதியாக கேட்டாள்.

"ஸோ.. உங்க கையை காலை முறிக்கிறதுக்கு.. நீங்களே சோழ வந்தான்ல இருந்து கெளம்பி வந்துருக்கீங்க..??"

"ஆமாம் வசு.. நீ என்னைத்தான் லவ் பண்றேன்னு எனக்கு தெரியாது.. இல்லன்னா வந்திருக்க மாட்டேன்.." நான் மூஞ்சியை பாவமாக வைத்துக்கொண்டு சொன்னேன்.

"சரி.. இவ்வளவும் செய்றதுக்கு.. அம்மாகிட்ட என்ன டீல் பேசுனீங்க..?"

"ஒரு ஹோட்டலை என் பேர்ல எழுதி வைக்கிறதா சொன்னாங்க..!!"

"ஹோட்டலா..?"

"ஆமாம்.. அந்த பூந்தமல்லி ஹோட்டலை..!!"

நான் சொன்னதும் வசுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. எளிறுகள் எல்லாம் தெரிய, வயிற்றை பிடித்துக்கொண்டு, விழுந்து விழுந்து சிரித்தாள். எனக்கு எதுவும் புரியவில்லை..!!

"என்னாச்சு வசு.. ஏன் இப்படி சிரிக்கிற..?" 

"அந்த ஹோட்டலா..? அதான பாத்தேன்.. அம்மா அம்பது காசு செலவு பண்ண கூட அவ்வளவு யோசிப்பாளே..? அவ எப்படி உங்களுக்கு ஹோட்டல் கொடுப்பான்னு நெனச்சேன்.. சரியாத்தான் இருக்கு..!!" 

"ஏன்.. அந்த ஹோட்டலுக்கு என்ன..?"

"ஹோட்டல் என்னவோ அம்மா பேர்லதான் இருக்கு.. ஆனா பீடா பீட்டர்னு ஒரு ரவுடிதான்.. அந்த ஹோட்டலை நடத்திக்கிட்டு இருக்குறான்.. அந்த ஹோட்டல் அவனுக்குத்தான் சொந்தம்னு சொல்றான்.. ‘யாராவது சொந்தம் கொண்டாடிட்டு அந்தப்பக்கம் வந்தீங்க.. தலை இல்லாம முண்டமாத்தான் திரும்புவீங்க’ன்னு சொல்லிருக்கான்..!! அந்த ஹோட்டலை அம்மா உங்க தலைல கட்டிட்டாளா..? பேஷ்.. பேஷ்..!! போங்க.. அந்த பீட்டர் நல்லா அருவாளை தீட்டி வச்சிருக்கான்.. உங்க கழுத்துலையே போடுவான்..!!"

அத்தை எவ்வளவு பெரிய தில்லாலங்கடி பொம்பளை என்று இப்போது எனக்கு தெளிவாக புரிந்தது. கொலைகார பாதகத்தி..!! எவ்வளவு கேஷுவலாக, என் உயிரை பறிக்கும் உயில் எழுத திட்டமிட்டிருக்கிறாள்..? நான் பதட்டத்துடன் வசுவிடம் கேட்டேன்.

"நெஜமாத்தான் சொல்றியா வசு..? அவ்ளோ பெரிய ரவுடியா அவன்..? வெட்டிடுவானா..?"

"ம்ம்.. கண்டிப்பா வெட்டுவான்..!! அவன் ஒன்னும் உங்களை மாதிரி டுபாக்கூர் ரவுடி இல்லை.. ஒரிஜினல் ரவுடி..!!"

"ஒய்.. என்ன சைடுல என்னை நக்கலடிக்கிற..? நான் டுபாக்கூரா..?"

"பின்ன..? ஏன்த்தான்.. உங்க ஊர்ல ஒருத்தனுக்கும் அறிவே இல்லையா..?"

"ஏன்..?"

"உங்களைலாம் எப்படி ரவுடின்னு ஒத்துக்கிடானுக..? அமுல்பேபி மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு.. உங்களை பாத்தா பயமாவே இல்லைத்தான்..!! சிரிப்புத்தான் வருது..!!"

"ஏய்.. எல்லாம் நேரம்டி.. சரி.. சரி.. சொல்லிட்டுபோ..!! நீ எவ்ளோ கேவலமா வேணா என்னை திட்டிக்கோ.. எனக்கு கவலை இல்லை..!! எனக்கு அந்த பீடா பீட்டர், அவன் அருவா, அந்த பூந்தமல்லி ஹோட்டலு.. எதுவும் வேணாம்..!! நீ என்னை லவ் பண்ற பாத்தியா..? அது ஒன்னு போதும்..!!"

"என்ன லவ் பண்றனா..? பண்ணினேன்..!! பாஸ்ட் டென்ஸ்..!! லவ்லாம் நேத்தோட கேன்சல் பண்ணியாச்சு..!!"

"என்னது..??? கேன்சல் பண்ணிட்டியா..? என்னவோ ரிசர்வேஷன் பண்ணின டிக்கட்டை கேன்சல் பண்ணின மாதிரி சொல்ற..? லவ்வும்மா..!!"

"அத்தான்.. எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்..!! நான் சின்ன வயசுல இருந்து.. உங்களை சின்ஸியரா லவ் பண்ணினேன்.. நேத்துவரை உங்க மேல உயிரையே வச்சிருந்தேன்.. நேத்து நீங்க பேசுனிங்களே ஒரு டயலாக்கு.. அதுலயே எல்லாம் நாசமா போயிடுச்சு..!!"
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 02-10-2019, 08:28 PM



Users browsing this thread: 9 Guest(s)