screw driver ஸ்டோரீஸ்
என்னால் ரொம்ப நேரம் அந்த மாதிரி உட்கார்ந்திருக்க முடியவில்லை. உள்ளத்தில் வசுவின் மீதான காதல் ஊற்று, சரசரவென ஊற ஆரம்பித்தது. உடைப்பெடுத்து பொங்க ஆரம்பித்தது. உட்கார விடாமல் என்னை உந்தி தள்ளியது. உடனே நான் வண்டியை எடுத்துக்கொண்டு அவளுடைய காலேஜுக்கு பறந்தேன். வாட்ச்மேனிடம் வசுவை பார்க்கவேண்டும் என்று சொன்னேன். வசுவும் வந்தாள். வந்ததுமே எரிச்சலாக கேட்டாள்.

"என்ன..????"

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வசு..!!"

"என்ன பேசணும்..? அதான் நேத்தே எல்லாத்தையும் பேசி தள்ளிட்டீங்களே..?"

"இல்லை இது வேற.. கொஞ்ச நேரம் உன்கிட்ட தனியா பேசணும் வசு.. அதோ.. அந்த பொட்டிக்கடைல போய்.. ஒரு தம் அடிச்சுக்கிட்டே பேசலாமா..? ம்ம்..?"

"என்னது..????" வசு உக்கிரமாக முறைத்தாள்.

"அப்போ நீயே ஒரு நல்ல எடம் சொல்லு.." நான் அப்பாவியாய் சொல்ல, அவள் கொஞ்ச நேரம் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம்,

"வாங்க..!!"

என்று கோபமாக சொல்லிவிட்டு முன்னால் நடந்தாள். நான் அவளை பின்தொடர்ந்தேன். காலேஜை ஒட்டியிருந்த அந்த பார்க்குக்கு வசு என்னை அழைத்து சென்றாள். ஆள் அரவம் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த பார்க். ஓரமாய் கிடந்த ஒரு மரபெஞ்சில் அவள் அமர்ந்து கொள்ள, நான் அவளுக்கு அருகே அமர்ந்து கொண்டேன். தொண்டையை லேசாக கனைத்துவிட்டு ஆரம்பித்தேன்.

"அந்த பையனை கட்டிக்க.. நீ ஓகே சொல்லிட்டியாமே.. அத்தை சொன்னாங்க..!!"

"ஆமாம்.. அதுக்கு என்ன இப்போ..?" அவள் சூடாக கேட்டாள்.

"அப்போ.. உன் லவ்வு என்னாச்சு..?"

"ம்ம்... லவ்வு.. மசுரைப்.. என்னமாத்தான் வருது..??" வசு ரொம்ப கோபமாக இருக்கிறாள் என்று புரிந்தது.

"வசு.." நான் சாந்தமான குரலில் அவளை அழைத்தேன்.

"ம்ம்ம்ம்...?" அவள் சூடு கொஞ்சமும் குறையாமல் கேட்டாள்.

"எ..எனக்கு ஒரு டவுட்டு.. கேட்டா கோவிச்சுக்க மாட்டியே..?"

"என்ன டவுட்டு.. கேளுங்க..!! இனிமே கோவிச்சுக்க என்ன இருக்கு..?"

"நீ.. நீ.. லவ் பண்ணினது என்னையா..?"

நான் கேட்டதும் வசு பட்டென்று என்னை திரும்பி முறைத்தாள். ஒரு மாதிரி ஏளனமாய் என்னை ஏற இறங்க பார்த்தாள். எள்ளல் கொப்பளிக்கும் குரலில் சொன்னாள்.

"அய்யோடா.. ஒரு வழியா புரிஞ்சுடுச்சுடா.. ஒரு மரமண்டைக்கு..!!"

"ஓ.. அப்போ நெஜமாவே நீ என்னைத்தான் லவ் பண்ணினியா..?" நான் சந்தோஷத்தை அடக்க முடியாமல் கேட்க,

"ஓ.. அப்போ இன்னும் முழுசா புரியலையா உங்களுக்கு..? சரியான.. ட்யூப்லைட்டு.. ட்யூப்லைட்டு..!!" அவள் திட்டினாள்.

"என்ன வசு நீ..? என்னை லவ் பண்றேன்னா.. அதை நேரா என்கிட்டே வந்து சொல்றதுக்கு என்ன..?"

"எதுக்கு..? என்னையும் மேட்டர் பண்ணிட்டு.. டாட்டா காட்டுறதுக்கா..?"

"ஐயோ.. அதெல்லாம் நான் சும்மா சொன்னே வசு.. எல்லாமே பொய்..!! நானாவது.. பொண்ணை மயக்குறதாவது..? என் மூஞ்சியலாம் எவளுக்காவது புடிக்குமா..? அப்டியே எதுக்காவது புடிச்சாலும்.. அது ஏதாவது லூசாத்தான் இருக்கும்..!!"

"என்னது..???" வசு ஆத்திரத்துடன் என்னை எரித்துவிடுவது போல பார்க்க, நான் நாக்கை கடித்துக் கொண்டேன்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 02-10-2019, 08:26 PM



Users browsing this thread: 7 Guest(s)