Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--content-color)]இந்தநிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் வாங்கியது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டிருப்பதாக, `டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், முறைகேடாக வீடு வாங்கியது குறித்து, விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.பி என்னும் மத்திய உளவுத்துறை தஹில் ரமானி ராஜினாமா செய்ததற்குப் பிறகு 5 பக்க அறிக்கையை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F58bde895-a800-4fcf-9...2Ccompress]
Tahilramani
[/color]
[color=var(--content-color)]டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், `தஹில் ரமானியின் பணப்பரிவர்த்தனை குறித்து மத்திய உளவுத்துறை விரிவாக அலசியுள்ளது. அதன்படி, 3.18 கோடி ரூபாய்க்கு சென்னை புறநகரில் உள்ள செம்மஞ்சேரியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு புதிய வீடுகளை அவர் வாங்கியுள்ளார். அதில் கடந்த ஜூன் - ஜூலை மாதங்களில் 1.62 கோடி ரூபாய் ஹெச்டிஎஃப்சி வங்கியின் லோன் மூலமாக செலுத்தப்பட்டுள்ளது. மீதியுள்ள 1.56 கோடி ரூபாய் சொந்த சேமிப்பிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது
[color=var(--content-color)]6 வங்கிக் கணக்குகளை மத்திய உளவுத்துறை பட்டியலிட்டுள்ளது. அதில் தஹில் ரமானியின் கணவருடன் சேர்ந்து 3 ஜாயின்ட் அக்கவுன்டுகளும் தாயுடன் சேர்த்து மற்றொரு வங்கிக் கணக்கு, வருமான கணக்கு மற்றும் மகனுடைய வங்கி கணக்குகள் இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூலை 8-ம் தேதி அவரது தாயுடனான ஜாயின்ட் அக்கவுன்டிலிருந்து, அவரது கணக்கில் 18 லட்ச ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2Fdb3c0dab-7aba-43a7-9...2Ccompress]
Vijaya Kamlesh Tahilramani
[/color]
[color=var(--content-color)]அடுத்த மாதத்திலேயே ரூ.18 லட்சம் பணம் காசோலை மூலம் ஜாயின்ட் அக்கவுன்டுக்கு வந்துள்ளது. மேலும், முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு சிலை திருட்டு வழக்குகள் குறித்து விசாரிக்க நீதிபதி மகாதேவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை தஹில் ரமானி கலைத்தார். இதையும் மத்திய உளவுத்துறை கோடிட்டுக் காட்டியுள்ளது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 30-09-2019, 05:45 PM



Users browsing this thread: 87 Guest(s)