Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]`ராஜினாமாவுக்குப் பிறகும் துரத்தும் சர்ச்சை!’ - சி.பி.ஐ வளையத்தில் தஹில் ரமானி?[/color]

[color=var(--title-color)]முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு சிலை திருட்டு வழக்குகள் குறித்து விசாரிக்க நீதிபதி மகாதேவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை தஹில் ரமானி கலைத்தார். இதை ஐ.பி கோடிட்டுக் காட்டியுள்ளது.[/color]
[Image: vikatan%2F2019-09%2F1e8693c6-ddc1-485e-a...2Ccompress][color=var(--meta-color)]tahilramani[/color]
[color=var(--content-color)]சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் தஹில் ரமானி. தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஒருவருடம் ஆன நிலையில், சென்னைக்கு வேறு தலைமை நீதிபதியை நியமிக்க கொலீஜியம் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதன்படி, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமானியை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த இடமாற்றத்தை ஏற்க மறுத்து, கொலீஜியத்துக்கு கோரிக்கை வைத்தார் தஹில் ரமானி. ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இந்த நிலையில், தஹில் ரமானி இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2Fa9cf79e0-8404-4fcb-a...2Ccompress]
tahilramani
[/color]
[color=var(--content-color)]இதனிடையே, அவரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், தஹில் ரமானிக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. ``பாரம்பர்யமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைமை நீதிபதியாகப் பணியாற்றியது குறித்துப் பெருமை கொள்கிறேன். மும்பையை ஒப்பிடும்போது சீதோஷ்ண நிலை, சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னையே சிறந்து விளங்குகிறது. சென்னையிலேயே குடியேற விரும்புவதால், இங்கே நிலம் வாங்கியுள்ளேன்” என்று பேசினார்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 30-09-2019, 05:44 PM



Users browsing this thread: 45 Guest(s)