screw driver ஸ்டோரீஸ்
"ஹலோ.. எச்சூஸ்மி.. மிஸ் வசு..!!"

"ம்ம்.. வாங்கத்தான்.. சாப்பிட்டீங்களா..?"

"ம்ம்.. ஆச்சு ஆச்சு..!! உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே.. வந்ததுல இருந்தே பேசனுன்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன்.."

நான் சொன்னதும் வசு, கண்களை இடுக்கி என்னை கூர்மையாக பார்த்தாள். உதட்டில் ஒருமாதிரி குறும்பு புன்னகையுடன் சொன்னாள்.

"அப்டி என்ன பேசணும்.. இப்போ பேசலாமே..?"

"அ..அது.. அது.. நீ யாரையோ லவ் பண்றியாமே.. அப்டியா..?"

"யார் சொன்னது உங்களுக்கு..?"

"அத்தைதான் சொன்னாங்க..!!"

"ஓஹோ..? ம்ம்ம்ம்.... ஆமாம்.. லவ் பண்றேன்..!! அதுக்கு என்ன இப்போ..?"

"ஒன்னும் இல்லை.. அவரு அட்ரெஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா..?"

"எதுக்கு..?""

"சும்மா.. அவரை பாத்து ஒரு ஹாய் சொல்லலாம்னு..!!"

மனதுக்குள் 'சும்மா.. அவரை பாத்து அவர் கையை காலை முறிக்கலாம்னு..!!' என்று சொல்லிக் கொண்டேன்.

"போங்கத்தான்.. அதெல்லாம் சொல்ல முடியாது.. சீக்ரட்..!!" அவள் ஒரு மாதிரி சலிப்பாக சொன்னாள்.

"இங்க பாரு வசு.. நீ எதுக்கு தயங்குறேன்னு எனக்கு புரியுது.. அத்தை அந்த பையனை ஏதாவது பண்ணிடுவாங்கன்னுதான..? அத்தான் நான் இருக்கேன் வசு..!! நான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறேன்..!!"

"யாரு..?? நீங்களா..?? போங்கத்தான்.. போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க..!!" எரிச்சலாக சொல்லிவிட்டு நகர முயன்றவளை, நான் கை நீட்டி மறித்தேன்.

"அப்போ... சொல்ல மாட்ட..?"

"சொல்ல மாட்டேன்.. என்ன பண்ணுவீங்க..? உங்களுக்கு வேணுன்னா நீங்களே கண்டு பிடிச்சுக்குங்க..!!"

"ஏன்..? என்னால கண்டு முடியாதுன்னு நெனைக்கிறியா..?"

"சத்தியமா முடியாது..!!" அவள் பட்டென்று சொன்னாள்.

"ஏன் அப்டி சொல்ற..?"

"ஏன்னா.. நீங்க ஒரு ட்யூப் லைட்டு..!! பொண்ணுகளை பத்தி உங்களுக்கு ஒரு எழவும் தெரியாது..!!" 

அவள் கிண்டலாக சொல்ல, எனக்கு கடுப்பாக வந்தது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள் என்னை பற்றி..? ஒன்னும் தெரியாத மக்கு என்றா..? என்னைப் பற்றிய அவளுடைய எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றியது. இன்ஸ்டண்டாய் பொய் சொல்ல ஆரம்பித்தேன். 

"யாரு..? எனக்கு பொண்ணுகளை பத்தி தெரியாதா..? சோழவந்தான் வந்து கேட்டுப் பாரும்மா..!! எல்லா பொட்டை சிறுக்கிகளும் ஐயாவோட பெருமையை எடுத்து சொல்லுவாங்க..!!"

"எ..என்னத்தான் சொல்றீங்க..?" வசு ஒரு மாதிரி அதிர்ச்சியாய் கேட்டாள்.

"உண்மையை சொல்லிட்டு இருக்குறேன்..!! எத்தனை பொண்ணுகளை இதுவரை மயக்கிருக்கேன் தெரியுமா..?"

"எ..எத்தனை..????"

"அது இருக்கும்.. எக்கச்சக்கமா..!! எண்ணிட்டுலாம் இருக்குறது இல்லை.. மாசத்துக்கு ஒருத்தி..!! நாங்கல்லாம் பல்சரை எடுத்துட்டு.. அப்டியே ஒரு ரவுண்டு வந்தோம்னா.. பத்து பொண்ணுகளுக்கு ரூட்டு போடுவோம்..!! என்னைப் பாத்து நா கூசாம.. ட்யூப் லைட்டுன்னு சொல்ற..!!"
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 30-09-2019, 09:48 AM



Users browsing this thread: 1 Guest(s)