நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
ஒ மேடத்துக்கு தமிழ் தெரியாது இல்ல இப்ப நீங்க மாசமா இல்லாட்டி கூட பளார்ன்னு கன்னத்துல ஒரு அரை விட்டு செக் பண்ணிடலாம் இப்ப என்ன பண்ணாலாம் என்று யோசித்து விட்டு சரிங்க நான் இவ சுவாதின்னு ஒத்துக்கிற வரைக்கும் இந்த இடத்த விட்டு நகரல நம்ம ரெண்டு மாச குழந்தை பசில துடிக்கட்டும் என்றாள் வள்ளி .அதை கேட்டு சுவாதி கொஞ்சம் கலக்கம் அடைந்தாள் .
ஆனால் அவள் அதே நடிப்பில் சாலோ சாலோ பாஹர் சாலோ என்றாள் சுவாதி .ம்ம் ஓகே மேடம் நான் பாஹரே சல்றேன் ஆனா வெளிய தான் நிப்பேன் இது தான உன் வீடு வெளிய இருக்கிறது உன் இடம் இல்லலே நான் வெளியே நிக்குறேன் நீ சுவாதியா இருந்தா என் கூட வந்து பேசு இல்ல நான் எவளவு நேரமானலும் அப்படியே நிப்பேன் .என் குழந்தை என் வீட்லே பசில துடிக்கட்டும் என்று சொல்லி விட்டு வேக வேகமாக போயி வெளியே காரில் சாய்ந்து வள்ளி நின்று கொண்டாள் .
கதவின் இடுக்கு வழியாக சுவாதி பார்க்க வெளியே காரில் சாய்ந்து வள்ளி நின்று கொண்டாள் .ஐயோ இவ இப்படி பண்றா பச்சை பிள்ளையே வேற வீட்ல வச்சுக்கிட்டு இங்க ஏன் நிக்குறா நான் யார இருந்தா இவளுக்கு என்ன போக வேண்டியது தானே என்று மனதிற்குள்ளே சொல்லி விட்டு ஒரு பத்து நிமிடம் நகத்தை கடித்து கொண்டு அங்கும் இங்கும் நடந்தாள் .மீண்டும் வெளியே பாத்தாள் .
வள்ளி இப்ப நீ வரியா இல்ல நான் மட்டும் போகவா என்றான் மணி .போங்க யார் வேணாம்னு சொன்னா உங்க மார்ல தான பால் குடிக்குது குழந்தை அதுனால நீங்க தான் கண்டிப்பா போகணும் என்று கிண்டலாக சொன்னாள் .ஐயோ ஏண்டி இப்படி பிடிவாதம் பிடிக்கிற வாடி போலாம் என்று மணி கத்த நான் வரல நீங்க வேணும்னா போங்க என்று வள்ளி அமைதியாக சொல்ல மணி கடுப்பில் காரை உதைத்தான் .எ அடுத்தவன் கார ஒடச்சுடதிங்க என்றாள் .ஆமா இப்ப இது ரொம்ப முக்கியம் என்றான் கடுப்போடு ஆமா முக்கியம் தான் என் பிரதர் நம்மள நம்பி ஒப்படைச்சுட்டு போயிருக்கான்ல நாம அத பத்திரமா பாத்துக்கிற வேணாம் என்றாள் .
சரி தாயே ஒன்னும் பண்ணல வீட்டுக்கு வரியா போவோம் என்றான் மணி .நான் வரல என்றால் வள்ளி .மீண்டும் காரை எத்தினான் .ஹே ஏன் என்றாள் .பேசாத எதுவும் என்கிட்ட என்றான் மணி ,ரொம்ப நல்லது என்றாள் .பின் இருவரும் பேசாமல் அங்கேயே அமைதியாக இருக்க மணி மட்டும் டென்சன் ஆகி அடிக்கடி அவனாக முணுமுணுக்கவும் பக்கத்தில் இருக்கும் எதையாவது அடிக்கவும் உதைக்கவும் செய்து கொண்டு இருந்தான் .
ஒரு இருபது நிமிடங்கள் ஆகிற்று .என்ன பண்ணலாம் செல்ல குட்டி நீ வள்ளி அத்தைய பாக்க ஆச படுரியா என்றாள் வயிற்றை தடவி கொண்டே கேட்டாள் .எனக்கும் ஆச தான் அவ கிட்ட பேசணும்னு எனக்கு மும்பைல கிடைச்ச ரெண்டாவது பிரண்டு அஞ்சலி அக்கா கிட்ட பேச முடியாததா கூட இவ கிட்டே பேசுவேன் ஆனா இப்ப இவள உள்ள விட்டு அப்புறம் எல்லாம் அவளுக்கு தெரிஞ்சு அதுக்கு அப்புறம் அது விக்கிக்கு தெரிஞ்சா விக்கி அவளவு தான் என்னைய கொன்னே போடுவான் இப்ப என்ன பண்றது என்று மீண்டும் கதவின் இடுக்கில் பார்க்க வள்ளி நின்று கொண்டு தான் இருந்தாள் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 30-09-2019, 09:34 AM



Users browsing this thread: 63 Guest(s)