Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
நேற்று கைது... இன்று விடுவிப்பு... நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணையில் திடீர் திருப்பம்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த மாணவி அபிராமி மற்றும் அவரது தந்தையை சிபிசிஐடி போலீஸார் இன்று விடுவித்துள்ளனர்.
[Image: neet-.jpg]நேற்று கைது... இன்று விடுவிப்பு... நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணையில் திடீர் தி...

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் மருத்துவக் கல்வித் துறையில் தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது.





இந்த விவகாரம் தொடர்பாக மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தையும், மருத்துவருமான வெங்கடேசன் ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த தொடர் விசாரணையில் கேரளத்தைச் சேர்ந்த இடைத்தரகர் ஜார்ஜ் ஜோசப் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

ஜார்ஜ் ஜோசப், வெங்கடேசன் ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணையில் சென்னையைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அபிராமி என்ற மாணவி, அவரது தந்தை மாதவன், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ராகுல் என்ற மாணவர், அவரது தந்தை டேவிட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் பிரவீனும், அவரது தந்தை சரவணனும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைதாகியுள்ள 6 பேரையும் தேனி அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். தேனி நீதிமன்றத்தில் இவர்கள் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி அபிராமியை சிபிசிஐடி போலீஸார் இன்று விடுவித்தனர். அவரது தந்தையும் விடுவிக்கப்பட்டார்.

அபிராமியின் நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படத்துடன் அவரது புகைப்படம் ஒத்துபோனதையடுத்து, விசாரணையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அபிராமியின் புகைப்படம் தொடர்பாக, தடயவியல் துறையின் ஆலோசனையை பெற்றே, அவர் விடுவிக்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 30-09-2019, 09:16 AM



Users browsing this thread: 98 Guest(s)