Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்ற அவர், குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தமிழக வரலாறு பண்பாடு சேர்க்கப்பட்டுள்ளது, திருக்குறளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த புதிய திட்டம் தமிழே தெரியாதவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறினர். அதேபோல் புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் தேர்வு எழுதக்கூடியவர்கள் தேர்வு எழுத தயாராவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்றனர்.

[/url]
[url=https://tradingoptions/Binary_Options_Trading_Platform_Can_Surprise_You]
அதேபோல் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேள்விகள் தவறாக வருவதை குறைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று கூறிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன், குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் தவறு இருந்தது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே குழு அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் அந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேள்விகள் தயார் செய்யப்படும் நடவடிக்கை அனைத்தும் ரகசியமாக மேற்கொள்ளப்படும் எனவும், கேள்விகள் அச்சிடப்பட்டு அதன் பின் கவரில் வைத்து சீல் வைத்ததும், தேர்வு அறையில் மாணவர்கள் அதனை பிரிக்கும் போது தான் கேள்விகள் தவறா? என்பது தெரிய வரும் எனக் கூறினார்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி வேலை வாய்ப்பு குறித்து ஏற்கனவே கால அட்டவணை போடப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டிற்கு அட்டவணை போடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்த அவர், டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், இதுவரை அதுபோன்று நடந்தது இல்லை என்றும் தெரிவித்தனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 30-09-2019, 09:13 AM



Users browsing this thread: 65 Guest(s)