screw driver ஸ்டோரீஸ்
"தேங்க்ஸ் அத்தை.. அப்போ நான் கெளம்புறேன்..!!"

"இரு இரு.. என்ன ப்ளான் இன்னைக்கு..? அந்த பையனை எப்டி கண்டுபிடிக்க போற..?"

"ஏன் அத்தை இப்படி அவசரப்படுற..? பொண்ணு வாழ்க்கையை கெடுக்குறதுக்கு.. இப்படி பறக்குறியே..? இன்னைக்குலாம் எந்த ப்ளானும் இல்லை.. மெட்ராஸ்ல எனக்கு நெறைய தோஸ்த் இருக்காங்க.. அவங்களை போய் பாத்து.. இன்னைக்கு ஃபுல்லா அவங்களோடதான் சுத்த போறேன்.. நாளைல இருந்துதான் உன் வேலை..!! ஓகேவா..?"

நான் வெளியே வந்தேன். அந்த பைக் நின்றிருந்தது. அதே பல்சர். அதே ரெட் கலர். நம்பர் மட்டும் வேறு. எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பினேன். அத்தையிடம் சொன்ன மாதிரி அன்று முழுவதும் எனது பழைய நண்பர்களுடன் கூத்தடித்தேன். நடுராத்திரிதான் வீடு திரும்பினேன். அடுத்த நாள்தான் வந்த வேலையை ஆரம்பித்தேன்.

நான் முதலில் குறிவைத்தது வசுவின் செல்போன். இந்த காலத்தில் காதலும், கைபேசியும் பிரிக்க முடியாத விஷயங்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். அவள் குளிக்க பாத்ரூம் சென்ற நேரம் பார்த்து அவளுடைய அறைக்குள் நுழைந்தேன். அவளுடைய செல்போனை நோண்டி, மெசேஜஸ் சென்று பார்த்தேன். பார்த்ததும் எனக்கு தோன்றிய ஒரே விஷயம்.. ஒன்று அவளுக்கு SMS அனுப்பும் பழக்கமே கிடையாது.. அல்லது ரொம்ப ஜாக்கிரதையானவள்..!! இன்பாக்சும், சென்ட் ஐட்டம்சும் சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருந்தன. எனக்கு முதல் ஏமாற்றம்..!!

நான் மனம் தளரவில்லை. கான்டாக்ட்ஸ் எடுத்தேன். அதில் இருந்த ஆம்பளை பெயர்கள் உள்ள போன் நம்பரை எல்லாம் என் செல்போனுக்கு ஏற்றிக் கொண்டேன். ஒரு சில ரெண்டுங்கெட்டான் பெயர்கள் (சக்தி, பாலா, etc ) அதையும் குறித்துக் கொண்டேன். எல்லாம் முடிந்து வசுவின் செல்போனை, அது இருந்த இடத்திலேயே வைக்க போனபோது, வசு பாத்ரூமில் இருந்து வெளியே வந்துவிட்டாள். கையும் கைபேசியுமாக அவளிடம் மாட்டிக் கொண்டேன். திருதிருவென விழித்தேன். அவளும் அவளுடைய அறையில் என்னை பார்த்ததும், முதலில் அதிர்ந்து போனாள். அப்புறம் சமாளித்துக் கொண்டு குழப்பமான குரலில் கேட்டாள்.

"அ..அத்தான்... நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. என் ரூம்ல..? அதுவும் என் செல்போனை வச்சுக்கிட்டு..?"

"அ..அது ஒன்னும் இல்லை வசு.. சு..சும்மா உன் செல் நம்பர் தெரிஞ்சுக்கத்தான்.. எடுத்து பாத்துக்கிட்டு இருந்தேன்..!!"

நான் தட்டுத்தடுமாறி சொல்லவும் வசுவின் முகம் பட்டென்று மாறியது. குழப்ப ரேகைகள் மறைந்து, ஒருவித குறும்பு ரேகைகள் முகம் எங்கும் பரவின. ஒருமாதிரி கண்களை இடுக்கி என்னை பார்த்தவாறு, கேலியாக கேட்டாள்.

"ம்ம்ம்.. நம்பர் வேணுன்னா என்கிட்டே கேக்குறதுக்கு என்ன..? அதுல கூட என்ன திருட்டுத்தனம்..? ம்ம்ம்..? சரி சொல்றேன்.. நோட் பண்ணிக்குங்க..!! நைன்.. எயிட்.."

தலையெழுத்தே என்று நான் அந்த நம்பரையும் நோட் பண்ணிக்கொண்டேன். அன்று முழுவதும் நான் அந்த வேலைதான் பார்த்தேன். ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தில் சென்று உட்கார்ந்து கொண்டேன். அந்த ஆம்பளை நம்பருக்கெல்லாம் கால் செய்து, தூண்டில் போட்டு பார்த்தேன். அதில் யாராவது அவளுடைய காதலனாக இருப்பானா என்று வலைவீசி பார்த்தேன். ஒரு மீனும் சிக்கவில்லை..!! எல்லாப் பயலும் தெளிவா இருந்தாய்ங்க..!! ஒன்று எந்த மீனுமே வசுவின் காதல் மீன் இல்லை.. அல்லது அந்த காதல் மீன்.. கழுவுற மீனில் நழுவுற மீன்..!!

செல்போன் ஐடியா வேலைக்காகாது என்று தோன்றியது. அடுத்த ஐடியாவை செயல் படுத்தினேன். வசுவை வண்டியில் ஃபால்லோ செய்வதுதான் அந்த ஐடியா..!! அடுத்த நாள் காலையில் வசு கிளம்புவதற்கு முன்பே நான் வீட்டை விட்டு கிளம்பினேன். அடுத்த தெரு முனையில் அவளுக்காக காத்திருந்தேன். அவளுடைய ஆக்டிவா கண்ணில் பட்டதும், ஹெல்மட் மாட்டிக்கொண்டு ஃபால்லோ செய்தேன். வசு மிதமான வேகத்தில்தான் சென்றாள். ஒரு பத்து மீட்டர் இடைவெளி விட்டு நான் ஃபால்லோ செய்தேன்.

பீச் ரோட்டில் இருக்கிறது வசு வேலை செய்யும் காலேஜ். அண்ணா நகரில் வண்டியை முறுக்கியவள், நூல் பிடித்த மாதிரி அந்த காலேஜை அடைந்து, காம்பவுண்டுக்குள் நுழைந்தாள். நான் அன்று முழுவதும் அந்த காலேஜையே சுற்றி சுற்றி வந்தேன். மாலை மறுபடியும் அவளை ஃபால்லோ செய்தேன். அவளும் மற்றொரு நூல் பிடித்து, அண்ணா நகர் வந்து சேர்ந்தாள். எனக்கு சப்பென்று போனது..!! சரி பரவாயில்லை.. இந்த மாதிரி ஒரு நான்கைந்து நாட்கள் ஃபால்லோ செய்தால், கண்டுபிடித்து விடலாம் என மனதை தேற்றிக் கொண்டேன். ஆனால் அடுத்த நாள் ஃபால்லோ செய்த போதே அது நடந்தது.

அந்த அதிகாலை நேரத்தில், வாலாஜா ரோட்டில் ஆள் நடமாட்டம் ஜாஸ்தியாக இல்லை. எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வசு, திடீரென்று தன் வண்டியை திருப்பி, ஒரு யு-டர்ன் போட்டாள். என்னை நோக்கி எதிர் திசையில் வந்தாள். நான் சுதாரித்துக் கொள்ளும் முன்பே, எனது வண்டிக்கு குறுக்காக அவளுடைய வண்டியை நிறுத்தி, ப்ரேக் போட்டாள். நானும் உடனடியாக என்னுடைய ப்ரேக் கட்டையை அழுத்த வேண்டி இருந்தது. வண்டியில் இருந்து இறங்கி வந்த வசு, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு என்னையே முறைத்தாள். உக்கிரமான குரலில் சொன்னாள்.

"ஹெல்மட்டை கழட்டுங்கத்தான்..!!" எனக்கு வேறு வழியில்லை. கழட்டினேன். இஞ்சி தின்ன குரங்கு மாதிரி 'ஈ...' என்று இளித்தேன்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 28-09-2019, 10:28 AM



Users browsing this thread: 8 Guest(s)