Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
நடிகர்: சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிகை: காஷ்மீரா, லிஜோமோள் டைரக்ஷன்: சசி இசை : சித்து குமார் ஒளிப்பதிவு : பிரசன்னா எஸ்.குமார்
முதல்முறையாக அக்காள்-தம்பி பாசத்துடன், அந்த தம்பிக்கும்-அக்காள் கணவருக்குமான உறவை நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் சொல்லியிருக்கிறார் டைரக்டர் சசி. படம் சிவப்பு மஞ்சள் பச்சை சினிமா விமர்சனம்.
இதுவரை அம்மா-மகன், அப்பா-மகன், அண்ணன்-தங்கை...என பல பாசமலர் கதைகளை பார்த்து இருக்கிறோம். முதல்முறையாக அக்காள்-தம்பி பாசத்துடன், அந்த தம்பிக்கும்-அக்காள் கணவருக்குமான உறவை நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் சொல்லியிருக்கிறார், டைரக்டர் சசி. லிஜோ மோள் ஜோஸ்-ஜீ.வி.பிரகாஷ் இருவரும் குழந்தை பருவத்திலேயே அம்மா-அப்பாவை இழந்த அக்காவும், தம்பியும். அக்காவுக்கு அப்பா போல் தம்பி ஜீ.வி.பிரகாசும், தம்பிக்கு அம்மாவைப்போல் லிஜோ மோள் ஜோஸ்சும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிகிறார்கள். “தம்பிக்கு பிடித்தவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று அக்காள் லிஜோ மோள் ஜோஸ், தம்பி ஜீ.வி.பிரகாஷ் கையில் சத்தியம் செய்து கொடுக்கிறார். அந்த சத்தியம் காப்பாற்றப்பட்டதா, இல்லையா? என்பதே ‘சிவப்பு மஞ்சள் பச்சை.’

சின்ன வயது அக்காள்-தம்பி கதையுடன் படம் ஆரம்பிக்கிறது. ஜீ.வி.பிரகாசின் ‘பைக்’ ரேஸ், சித்தார்த்-ஜீ.வி.பிரகாஷ் மோதல், காதலியின் தம்பி, தனக்கு மைத்துனன் என்ற உறவை நினைத்து பார்த்து சித்தார்த் இறங்கி வருவது, தன் மீதான கோபத்தை ஜீ.வி.பிரகாஷ் மனதில் இருந்து துடைத்து விடுவதற்கு முன்வருவது, இருப்பினும் ஜீ.வி.பிரகாஷ் சமாதானம் ஆகாமல் சித்தார்த்தை பழிவாங்குவதிலேயே குறியாக இருப்பது என ஒரு திகில் படத்துக்கான பதற்றத்துடன் திரைக்கதை வேகம் பிடிக்கிறது. இடைவேளைக்குப்பின், லிஜோ மோள் ஜோஸ்சுக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பது, எதுவும் சரிவராமல் மறுபடியும் மாப்பிள்ளையாக சித்தார்த் வருவது, ஜீ.வி.பிரகாஷ் காதல் வலையில் விழுவது, சித்தார்த்தையும், லிஜோ மோள் ஜோஸ்சையும் இணைத்து வைக்க ஜீ.வி.பிரகாசின் காதலி முயற்சிப்பது, வில்லன் மதுசூதனின் போதை மருந்து கடத்தல் என திருப்பங்களுக்கு மேல் திருப்பங்களுடன் கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. படத்தின் உச்சக்கட்ட காட்சிதான் நம்பகத்தன்மை இல்லாமல், நீளமான இழுவையாக இருக்கிறது. உணர்ச்சிகரமான பாசப்போராட்டங்களுடன் கூடிய கதாபாத்திரத்தில், முதல்முறையாக சித்தார்த். இதுபோன்ற கதையும், கதாபாத்திரமும் ஒரு கதாநாயகனுக்கு கிடைப்பது, வரம். கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார், சித்தார்த். காதலையும், மோதலையும் மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

கதாநாயகனுடன் மோதுவதால் ஜீ.வி.பிரகாசின் பாத்திரம் ஆரம்ப காட்சிகளில் வில்லன் போல் அமைந்து விடுகிறது. தன் பாசமுள்ள அக்காவுக்காக ஜீ.வி.பிரகாஷ் கொஞ்சம் கூட இறங்கி வராதது, பார்வையாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. சித்தார்த்துடன் மோதல், கட்டிப்பிடித்து உருளுதல், அவருடைய வீட்டில் வேண்டா விருப்பமாக தங்கியிருப்பது ஆகிய காட்சிகளில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் பிரகாசம். அந்த அக்காள் வேடத்தில் லிஜோ மோள் ஜோஸ், உருக வைத்து விடுகிறார். காதலரையும் விட்டுக் கொடுக்காமல், தம்பியையும் விட்டுக் கொடுக்காமல், இருவருக்கும் இடையில் சிக்கி தவிக்கும் காட்சியில், லிஜோ மோள் ஜோஸ் கலங்க வைத்து விடுகிறார். தமிழ் பட உலகுக்கு ஒரு நல்வரவு. இன்னொரு நாயகியான காஷ்மீராவும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். வில்லன் மதுசூதனின் மிரட்டல்கள், பயமுறுத்துகின்றன.

பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவும், சித்துகுமாரின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்து இருக்கின்றன. உணர்வுப்பூர்வமான கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் சசி. காட்சிகளும், வசன வரிகளும், சில இடங்களில் கண்கலங்க வைத்து விடுகின்றன. அக்காள் மீது பாசமுள்ள தம்பியும், தம்பி மீது பாசமுள்ள அக்காள்களும் அழுது விடுவார்கள். இதுபோன்ற உறவுகளை மேம்படுத்திக் காட்டும் படைப்புகள் நிறைய வரவேண்டும். அதற்கான பாராட்டுகள் சசி போன்ற டைரக்டர்களுக்கு போய் சேர வேண்டும்
.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 28-09-2019, 09:52 AM



Users browsing this thread: 14 Guest(s)