Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஐநா கூட்டத்திற்குப் பிறகு எல்லையில் பெரிய ஊடுருவலுக்கு திட்டமிட்டு உள்ள பாகிஸ்தான் ; 3000-4000 இளைஞர்களுக்கு பயிற்சி


[Image: 201909271559333977_Pakistan-planning-big...SECVPF.gif]
துடெல்லி

ஐநா பொதுக்குழு கூட்டத்திற்கு பின்  எல்லை கட்டுப்பாடு முழுவதும் பெரிய  ஊடுருவலுக்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. 3000-4000  இளைஞர்களுக்கு  பயிற்சி அளித்து தயாராக வைத்து உள்ளதாக இராணுவ ஆதாரங்கள்  தெரிவித்து உள்ளன.


பாகிஸ்தான் இராணுவம் ஜமாத் உல்-அல்-ஹதீஸுடன் (மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புதிய அமைப்பு) இணைந்து அக்டோபர் முதல் வாரத்தில் இந்திய எல்லையில் ஊடுருவ  ராவல்பிண்டியில் 3000-4000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி  அளித்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஆசாதி) சில இளைஞர்களும் அடங்குவர்.

இந்த பயிற்சியின் நோக்கம் இந்த இளைஞர்களை தீவிரவாதிகளாக்குவதும், அக்டோபர் முதல் வாரத்தில் எல்லையில் ஊடுருவக்கூடிய வகையில் அவர்களை கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிகளுக்கு அனுப்புவதும் ஆகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நியூயார்க்கில் நடைபெறும் ஐநா பொதுக்கூழு கூட்டம் முடிந்ததும்  பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தி பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என்று இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்திய பாதுகாப்புப் படைகள் அவர்களை குறிவைத்தால், மனித உரிமை மீறல் பிரச்சினையை பாகிஸ்தான் மீண்டும் எழுப்ப முடியும் என்பதற்காக  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களை கேடயமாக  பயன்படுத்த ஆட்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

மேலும், பாதுகாப்பு இடங்களுக்கு பாகிஸ்தான் இராணுவத்துடன்  அனுப்புவதில் நிறுத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை பாகிஸ்தான் மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, இந்திய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதில், கண்காணிப்பை அதிகரித்து உள்ளனர். மேலும் உயர்மட்ட கண்காணிப்பு அமைப்புகளை நிறுவி உள்ளனர்.

32 இடங்களில் பாகிஸ்தான் இராணுவத்துடன் பயங்கரவாதிகள்  காணப்பட்டதாக பாதுகாப்பு நிறுவன வட்டாரங்கள் தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-


1.பாகிஸ்தான் போஸ்ட்- இந்தியன் சைட்
2.பிபி நாலா - பூஞ்ச்
3.சோனார் - மச்சால்
4.ஹத்லங்கா- ராம்பூர்
5.அத்முகாம் - கெரன்
6.துத்னியல்- கெரன்
7. போஸ்ட் கிடார் 1- யூரி
8.குண்ட்கிரா- யூரி
9.சார்டி- மச்சால்
10.லாஞ்சோட்- பி.ஜி.
11. மோஹ்ரா- பி.ஜி.
12. காசிம்- மச்சால்
13.கோபிரா - சுஜியன்
14.பிபி பார்பட் 1 - பி.ஜி.
15.போலாஸ் - பூஞ்ச்
16.டெஜியன்- பி.ஜி.
17.மொச்சி மோஹ்ரா- பூஞ்ச்
18.மதர்பூர்- கே.ஜி.
19. பட்டால் மஜூரா- கே.ஜி.
20.கோய்- கே.ஜி.
21.தாண்டிகாசி- பி.ஜி.
22. ஜான்வாய்- மச்சால்
23. ஹர்மர்கி- மச்சால்
24.சாம்- யூரி
25. கதர்- கே.ஜி (கிருஷ்ணா காதி)
26.போக்ரா- உரு
27.பச்சிபன்- யூரி
28.ரோசா- கே.ஜி.
29.பிபி இரட்டை- கே.ஜி.
30.பி.எல் மஜார்- பி.ஜி.
31.நர்கோட்- நவுகம்
32.பாக் போஸ்ட் கிரீன் பம்ப்- பூஞ்ச்

ஊடுருவல் முயற்சிகளுக்கு உதவ, பாகிஸ்தான் இராணுவம் எல்லையைத் தாண்டி கடும் துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடும். பிர் பஞ்சால் எல்லைகளுக்கு வடக்கு மற்றும் தெற்கே எல்லைக் கட்டுப்பாடு முழுவதும் உள்ள சில ஏவுதளங்களில் இருந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 28-09-2019, 09:46 AM



Users browsing this thread: 104 Guest(s)