Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
இவை அனைத்தும் எங்களது அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டதன் விளைவாக அமைந்தவை. அவரை நாங்கள் கேள்வி கேட்க ஆரம்பித்த பின், கணக்கு புத்தகங்களை தீவிரமாக ஆராய்ந்த பின் அவர் வேண்டுமென்றே எங்களை மிகப் பெரும் நஷ்டத்தில் தள்ளியுள்ளார் என்பது புரிந்தது. அவர் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றை மீறி அவர் ஏற்படுத்திய நஷ்டத்தை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

இந்த இரண்டு படங்கள் விகையில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தான் எங்களது கண்களைத் திறந்து அனைத்திலும் நாங்கள் விசாரணையை நடத்த வேண்டியதாயிற்று. ஆகஸ்ட் 7ம் தேதி அந்தப் படங்களின் நஷ்டத்திற்காக அவர் 13 கோடி ரூபாயை 12 மாதங்களில் திருப்பித் தர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஓட்டலில் தங்கிய வகையில் 42 லட்சம், அட்வான்ஸ் பெற்ற விதத்தில் 14 லட்சம், கார்டுக்காக 13 லட்சம் அவரது கணக்கில் உள்ளது. வெளிநாட்டுப் பயணங்களுக்காக பிசினஸ் வகுப்பில் பயணித்தற்கு 1 கோடியே 26 லட்சம் ஹோட்டலில் தங்க 52 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சில வருடங்களாக அவர் தொடர்ந்து எங்களை ஏமாற்றியது துரோகத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அவரை நம்பி பல கோடிகளை முதலீடு செய்தோம். ஆனால், அவர் அதற்குத் தகுதியானவர் அல்ல.

மேலும், கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி ஒன்றிற்கு 25 கோடி ரூபாய் நிதி உதவியை எங்களது அனுமதி இல்லாமல் வழங்கியிருக்கிறார். அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தப் பணத்தை வாங்கித் தர வேண்டியது தன் பொறுப்பு என்றார். ஆனால், இதுவரையில் அந்தப் பணம் வரவில்லை.

எங்கள் அனுமதி இல்லாமல் வந்தா ராஜாவாதான் வருவேன், இந்தியன் 2 ஆகிய படங்களைத் தயாரிக்க ஆரம்பித்ததற்காக அதற்குரிய நஷ்டமான 13 கோடி ரூபாயை மட்டும் திருப்பித் தர சம்மதித்துள்ளார். அதே சமயம் 90 கோடி ரூபாய் நஷ்டம், கணக்கில் உள்ள 13 கோடி ரூபாய், 25 கோடி ரூபாய் கடன் வழங்கியது ஆகியவற்றிற்கான பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் விதத்தில் மேலும், நிதி மோசடிகள் வெளியாகுமோ என்ற பயத்தில் கம்பெனியை விட்டு விலக முயற்சிக்கிறார்.

இப்போது கருணாமூர்த்தியை கம்பெனியை விட்டு நீக்கிவிட்டோம். இதில் விசாரணை நடத்தினால் அவர் செய்த மேலும் பல கிரிமினல் செயல்களைப் பற்றித் தெரிய வரும். அவர்கள மீது விசாரணை நடத்தி எங்களது பணத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 26-09-2019, 05:13 PM



Users browsing this thread: 11 Guest(s)