Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
அனைத்து விதமான செயல்களிலும் கருணாமூர்த்தியின் உதவியாக இருந்த பானு தான் லைகா ஊழியர்களையும் நிர்வகிப்பார். பானுவின் உத்தரவுகளை மட்டுமே ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கருணாமூர்த்தி தெரிவித்திருந்தார். சம்பளம் வழங்குதல், மெயில்கள் பரிமாற்றம் என அனைத்திலும் கருணாமூர்த்திக்குப் பதிலாக பானு தான் முடிவெடுப்பார்.

[Image: 1569493333.jpg]


2014ல் நாங்கள் எங்களது சொந்த பணத்தில் தயாரித்து வெளியிட்ட கத்தி படத்தின் முக்கிய தமிழ்நாடு, கேரளா ஏரியாக்கள், வெளிநாட்டு உரிமை ஆகியவற்றை கருணாமூர்த்தி அவருடைய ஐங்கரன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக எந்தவிதமான ஒப்பந்தம் இல்லாமல் எடுத்துக் கொண்டார். சில தொகையை மட்டும் கொடுத்துவிட்டு அதன் மூலம் பெரும் லாபத்தைப் பெற்றார்.

அதே போல, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன் ஆகிய படங்கள் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்குத்தான் மொத்த தியேட்டர் உரிமை, சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டது. 95 கோடி ரூபாய்க்கு அவற்றை விற்றதில் எங்களுக்கு 5 கோடியை மட்டுமே அவர் கொடுத்து எங்களது கம்பெனியை ஏமாற்றியுள்ளார். 90 கோடி ரூபாய் வரை 3 படங்களுக்காக சட்டவிரோதமாக கையாண்டுள்ளார்.

மேற்சொன்ன படங்கள் அனைத்தும் லைக்கா நிறுவனம் சார்பாக நிதி அளிக்கப்பட்டவை ஆகும். அவை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. தியேட்டர் உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றுடன் கணக்கிட்டுப் பார்த்தால் சுமார் 100 கோடி ரூபாய் வரை எங்கள் கம்பெனிக்கு நக்ஷடம் வருகிறது.

கடந்த சில வருடங்களாக தீவிர விசாரணைக்குப் பிறகுதான் இதை நாங்கள் தெரிவிக்கிறோம். இப்படை வெல்லும், தியா, கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் கம்பெனி மீதான கவனம் செலுத்தாமல் முடிந்தவரையில் கையாடல் செய்திருக்கிறார். இவற்றின் நஷ்டம் குறித்த தகவல் விசாரணைக்குப் பிறகே தெரிய வரும்.


[Image: 1569493484.jpg]


எங்கள் அனுமதி இல்லாமல், எங்களுக்குத் தெரியாமல் எந்தவிதமான ஒப்பந்தம் இல்லாமல், ரசீது தொகையை மாற்றி முறைகேடு செய்திருக்கிறார். வெளிநாட்டு உரிமை பெற்றவர்களிடமிருந்து எங்களுக்கு வர வேண்டிய 13 கோடி ரூபாய் தொகையும் வரவில்லை.

கருணாமூர்த்தியின் ஒப்பந்தப்படி 2018ல் வந்தா ராஜாவாதான் வருவேன் படத் தயாரிப்பு மூலம் எங்களுக்கு 14 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்தியன் 2 படத்தை எங்களது அனுமதி இல்லாமல் தயாரித்து, பிப்ரவரி மாதம் திடீரென நிறுத்தப்பட்ட வகையில் 4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 26-09-2019, 05:12 PM



Users browsing this thread: 11 Guest(s)