Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
ரூ.110 கோடி மோசடி: தயாரிப்பாளர் கருணாமூர்த்தி மீது லைகா புகார்

[Image: NTLRG_20190926155127716526.jpg]

தமிழ்த் திரையுலகில் கத்தி படத்தின் மூலம் லைகா நிறுவனம் தயாரிப்பில் இறங்கியது. தொடர்ந்து 2.0 உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தது. அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த கருணாமூர்த்தி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பானு ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டதாக அவர்கள் மீது லைகா நிறுவனம் சார்பில் இன்று(செப்.,26) சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.




அந்தப் புகாரில் உள்ள விவரம் வருமாறு: 2013ம் ஆண்டில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு ஆலோசகர் தேவைப்பட்டதால் கே.கருணாமூர்த்தியை எங்களது கம்பெனினியின் ஆலோசகராக நியமித்தோம். பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான, இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரான கருணாமூர்த்தி, 27 வருடங்களாக தமிழ்த் திரையுலகத்தில் முக்கியத்துவம் பெற்றவராக இருப்பவர். அவருக்கு அனைத்து விதமான நிதிநிர்வாகங்களில் தனிப்பட்ட விதத்தில் பானு என்பவரும் உதவியாக இருக்கிறார்.





கதை கேட்பது, திட்டங்களை அனுமதிப்பது, எங்கள் தயாரிப்பில் படங்களைத் தயாரிப்பது என தனியாக அவர் முடிவெடுக்கும் விதத்தில் 2013ம் ஆண்டு முதலே கருணாமூர்த்தி அவருடைய தேன் தடவிய வார்த்தைகளால் எங்களை நம்ப வைத்தார். அனைத்து நடிகர்கள், நடிகைகள், மற்ற கலைஞர்கள் என அனைவருக்கும் அவர் தான் சம்பளம் பேசுவதில் முன்னிலை வகித்தார்.


அவருடைய அனுபவத்தால் தினப்படியான வேலைகள் அனைத்திலும் அவர் பங்கேற்பார். அதீதமான நம்பிக்கையால் அவருடைய அனுமதிக்குப் பிறகே நாங்கள் பணம் வழங்குவோம். லைகா நிறுவனத்தின் அனைத்து பரிமாற்றங்களும் அவருடைய கட்டுப்பாட்டிலும், நிர்வாகத்திலும் மட்டுமே இருந்தது. மார்க்கெட்டிங், கணக்கு வழக்குகள், நிதி நிர்வாகம் என அனைத்திலும் அவரை நம்பினோ
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 26-09-2019, 05:10 PM



Users browsing this thread: 2 Guest(s)