நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
நண்பனின் முன்னால் காதலி – 80

விக்கி வண்டியை எடுத்து கொண்டு மணி வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தான் .ஆனால் போகும் போது ஏதோ ஒரு யோசனையோடு வண்டியை திருப்பினான் .அவன் வண்டி ஒட்டி கொண்டே மணியிடம் பேசினான் .மணி நீங்க வீட்டிலே இருங்க நான் இங்க ஹெவி ட்ராப்பிக்ல மாட்டி கிட்டேன் அதுனால நான் வரர்துக்கு ஒரு அரை மணி நேரம் ஆகும் வெயிட் பண்றியா என்றான் விக்கி ,

பிளைட் எத்தன மணிக்குடா என கேட்டான் மணி .அது இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு பாஸ் தான் பார்மாளிட்டிக்குகாக ரெண்டு மணி நேரம் முன்னாடியே வர சொல்லிருக்காரு என்றான் விக்கி ,சரிடா எவளவுக்கு எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ வா என்றான் மணி ,சரிடா என்று சொல்லிவிட்டு வண்டியை வேகமாக ஆஸ்பத்திரிக்கு ஓட்டினான் .ஆஸ்பத்திரியில் போயி இறங்கி வேகமாக உள்ளே போனான் .
வழக்கம் போல் நர்ஸ் தடுத்து நிறுத்த நான் விக்னேஷ் வந்து இருக்கேன் உடனே அவசரமா பாக்கனும்னு ஜெனிபர் டாக்டர் கிட்ட சொல்லுங்க அவங்க கூப்பிடுவாங்க என்றான் .பின் நர்ஸ் உள்ளே போயி கேட்டு விட்டு வந்தாள் .சார் உள்ள போங்க சார் டாக்டர் கூப்பிடராங்க என்றாள் .சரி என்று சொல்லி விட்டு உள்ளே போனான் .வாங்க மிஸ்டர் விக்னேஷ் என்ன நீங்க மட்டும் வந்திரிக்கிங்க சுவாதி வரல அப்புறம் என்ன அன்னைக்கு ராக்கி மேரேஜ்ல சீக்கிரமாவே ரெண்டு பேரும் கிளம்பிட்டிங்க
டாக்டர் முதல நான் சொல்றத கோப படாம கேளுங்க என்றான் விக்கி .ஓகே சொல்லுங்க என்றார் டாக்டர் .டாக்டர் நான் அமேரிக்கா போறேன் என்றான் .வாட் என்ன விளயாடுரிங்கேலா சுவாதிக்கு இன்னும் ரெண்டு நாள்ல 9 மாசம் ஆக போகுது .9 வது மாசத்துலே சில குழந்தைக வெளிய வரதுக்கு வாய்ப்புகள் இருக்கு தெரியுமா என்றார் .அப்படி நடக்குமா டாக்டர் என்றான் .ஏன் 8 மாசத்துல கூட வெளிய வரதுக அத விடுங்க இந்த நிலைமைல அவள தனியா விட்டு போறேன்னு சொல்றிங்க உங்களுக்கு என்ன அப்படி இப்ப போயி அமேரிக்கா போகணும்
இல்ல டாக்டர் கம்பெனில ஒரு வோர்க அது நான் தான் போகணும் என்றான் .அதுக்கு வேற யாரையாச்சும் போக சொல்ல வேண்டியது தானே என்றார் டாக்டர் .இல்ல டாக்டர் நான் தான் அசிசிடேன்ட் மேனேஜர் அதுனால நான் தான் போயி ஆகணும் அது மட்டும் இல்லாம இது மல்டி நேசனல் கம்பெனி கூட ஜாயின் பண்ணி நடக்குற கம்பெனி இவங்க கிட்ட செண்டிமெண்ட்ஸ் எடுபடாது .யாரும் செத்தா கூட லீவ் தர மாட்டங்க அவங்க கிட்ட போயி நான் இப்படி சொன்னா உடனே வேலைய விட்டு போயிக்கொன்னு சொல்லிடுவாணுக
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 26-09-2019, 01:03 PM



Users browsing this thread: 1 Guest(s)