சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் ரோஷம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட அறியாது அவள் செய்து கட்டி வைத்த உணவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வீட்டை விட்டு கிளம்பினான் குமார். அவன் கிளம்பும்போது பெட்ரூமில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தாள் சங்கீதா “disgusting object” என்று முனுமுனுத்துகொண்டாள். (disgusting தமிழில்: அருவருப்பான ஒன்று). அங்கும் இங்கும் கையில் சிக்காமல் திறிந்த ரஞ்சித்தையும், சமத்தாக அம்மாவுக்கு உதவியாய் அனைத்தையும் செய்து குடுக்கும் ஸ்நேஹாவையும் அவர்களது ஸ்கூல் வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டில் யாரும் இல்லாமல் கொஞ்சம் அமைதியாய் ஹாலில் மீண்டும் அமர்ந்தாள். சற்று முன்பு நடந்த விஷயங்களை நினைக்க விரும்பவில்லை, எனவே தனது mobile phone எடுத்தாள், அதில் “message from Raghav” என்று இருந்தது. பரவசமாய்ப் பார்த்தாள் “did you reached home safely?” என்று நேற்று இரவு இரண்டு மணி அளவில் அனுப்பி இருந்தான். பதிலுக்கு மெசேஜ் அனுப்புவதற்கு மாறாக ராகவ்க்கு கால் செய்தால் சங்கீதா.. “ஹலோ….” – திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தை தாயைத் தேடுவது போல எப்போது அவன் குரலைக் கேட்க முடியும் என்று தவித்தது சங்கீதாவின் மனது. “ஹலோ சங்கீதா” – களைப்பான குரலில் பேசினான். இதுநாள் வரை இல்லாது இப்போது அவன் குரல் கேட்க்கையில் கன்னத்திலும், கைகளிலும் ஊசி முடிகள் எழுந்து நின்றது. மகிழ்ச்சியில் கண்கள் சிறிதளவில் அகலமானது, இதழ்கள் அதன் பங்குக்கு இரு புறமும் அழகாய் விரிந்தது இந்த தேவதைக்கு அவள் தேவனின் குரல் கேட்டது.


“sorry என்னால நேத்து ராத்திரி phone பண்ண முடியல அதான் மெசேஜ் அனுப்பினேன். ராத்திரி ஒன்னும் problem இல்லைல? – என்றான் ராகவ். “அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, முதல்ல உனக்கு காயம் எப்படி இருக்குன்னு சொல்லு?” “இதெல்லாம் சின்ன விஷயம்தான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்க, சாவியால கீரினதால எதுவும் septic ஆகப் போறதில்ல, இருந்தாலும் ஆயிடக் கூடாதுன்னு கொஞ்சம் மருந்து குடுத்து இருக்காங்க. “பைத்தியமாடா நீ? அவனைத் தப்பிக்க வைக்க வேற வழி தெரியாதா என்ன? சும்மாவே ஓட விட்டிருக்கலாம் இல்ல, மனசுல பெரிய கமல்னு நெனைப்பா? ரொம்பவே ஓவர் ஆக்டிங் பண்ணுற!.. அங்கேயே உன்னை காலர் புடிச்சி ஒரு அறை அறைஞ்சிட்டு வந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன். மௌனமாய் எதுவும் பேசாமல் சங்கீதாவின் அண்பு கலந்த அக்கறையான வார்த்தைகளை ரசித்தான் ராகவ். அவள் பேச பேச அது அவனுக்கு கீறல் விழுந்த நெஞ்சுக்கு மருந்தாய் இருந்தது “ராகவ்…” “உம்..” இஸ்ஹ்ம்ம் (ஒன்றும் பேசாமல் கொஞ்சம் பேரு மூச்சு விட்டாள் சங்கீதா..) “என்ன சொல்லுங்க…” “ஒன்னும் இல்ல, (சில நிமிடங்கள் மௌனம்..) நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் டா. வண்டி அனுப்பி வைக்க முடியுமா? I want to see you டா.. please” – எப்படியாவது பார்க்க வேண்டுமென்று அவள் மனது கேட்பதை ராகவ் உணர்ந்தான். “என்ன கேள்வி இது சங்கீதா, one minute please” – என்று சொல்லிவிட்டு பக்கத்தில் உள்ள intercom phone ல் சஞ்சனாவை அழைத்து “சங்கீதா வீட்டுக்கு உடனே நம்ம company வண்டிய அனுப்புங்க please” என்றான். அவன் பேசுவதை phone ல் கவனித்து “thanks டா..” – என்றாள் சங்கீதா. “என்ன விஷயமா சங்கீதா பார்க்கணும்?” – என்றான் ராகவ் ஒன்றும் தெரியாதவனாய் . “உம்…. பஜ்ஜி மாவு பத்தியும் வடை மாவு பத்தியும் பேசுறதுக்கு டா” – என்று பொய்யான கோவத்தில் சிரித்து பேசினாள் சங்கீதா. “ஹா ஹா ஹா, சரி சரி சொல்லுங்க..” “கொஞ்சம் மணசு சரி இல்லைடா…..(சில நொடி மௌனங்களுக்கு பிறகு தொடர்ந்தாள்) நீ ஏண்டா இப்படி எனக்கு ஒரு லெட்டர் குடுத்த?” – வார்த்தைகளை முடிக்கும்போது லேசாக அழ ஆரம்பிக்கும் குரல் கேட்டது ராகவ்க்கு. சங்கீதா ப்ளீஸ்… என்னாச்சு? நான் சொன்னது தப்புன்னு தொனுச்சின்னா விட்டுடுங்க. நீங்க உங்க வேலை குடும்பம்னு கவனிங்க – என்று ராகவ் அக்கறையாக பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் குறுக்கிட்டு நிறுத்தினாள் சங்கீதா. “என்னுடைய தனிப்பட்ட இறுதி முடிவை நாந்தான் எடுக்கணும், அதைப் பத்தி சொல்லுறதுக்கு நீ யாருடா?” – அமர்ந்திருக்கும் chair நுனிக்கு நிமிர்ந்து வந்து எதிரில் உள்ள கண்ணாடியின் முன் முறைத்துக் கொண்டு சத்தமாக உரிமையுடன் கொஞ்சம் கோவமாக கத்தினாள். ஏதோ தன்னிடம் இருந்து பறிக்கப் படுவது போல. “இல்ல அது வந்து…” – ராகவ் க்கு ஒரு நொடி ஏன் இப்படி பேசினோம் என்றிருந்தது. இன்று வரை சங்கீதா இப்படி கோவத்தில் கத்தி அவன் கேட்டதில்லை. “Will you just shut up?” – மீண்டும் குரல் உச்சத்துக்கு போனது சங்கீதாவுக்கு… கண்ணாடியில் கண்கள் முறைத்தன. “நீ கொட்ட வேண்டியத எல்லாம் கொட்டிட்ட நான் என்ன சொல்லணும் னு நினைக்கிறேனோ அதை நான் தான் சொல்லணும், அதுக்கும் நீயே பதில் சொல்லிகிட்டா அப்புறம் நான் நடுவுல உப்புச்சப்பானா?” correct… correct னா?, அப்போ நான் உப்புச்சப்பானா? அய்யோ…. இல்ல இல்ல உங்க முடிவு உங்கள் கையில் னு நீங்க சொன்னது correct னு சொன்னேன். (சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தான்) ஹ்ம்ம்.. என் கடிதத்துல ஒரு விஷயம் எழுத மறந்துட்டேன். என்னது? – சங்கீதாவின் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இருப்பதை அவள் முன்பு இருக்கும் கண்ணாடி மட்டும் அறிந்தது. ஆனால் அவனுடன் பேசும்போது வாயின் மீது கை வைத்து மூடி அந்த சிரிப்பின் சத்தத்தை மறைத்தாள் இந்த தேவதை. “வெடிக்கும் எரிமலையிடம் என் தேவதையின் கோவத்தைப் பார்த்தால் நீ கூட அமைதியாய் அடங்கி விடுவாய்” னு எப்படி? correct தானே?” – என்று ராகவ் சொல்ல…. அதற்கு பாதி கோவமும், பாதி சிரிப்பும் கலந்து என்ன பேசுவதென்றே தெரியாமல் அமைதியாய் இருந்தாள் சங்கீதா. “ஹலோ என்ன ஆச்சு?” – என்றான் ராகவ். “ஒன்னும் இல்ல.” – மெதுவாக முந்தானையின் நுனியை பிடித்து திருகிக் கொண்டே சத்தமில்லாமல் முணுமுணுத்தாள் . – இது அப்படியே ஒரு காலத்தில் ரமேஷ் அவளது வாழ்க்கையில் இருக்கும்போது சங்கீதாவுக்கே உரிய அக்மார்க் குணம்….. ஏன் பல பெண்களுக்கே உரிய குணமும் கூட. “ஒன்னும் கேட்கல, திருப்பி சொல்லுங்க please” – என்றான் ராகவ். “ஒன்னும் இல்ல னு சொன்னேன்..” – சத்தமாக கத்தி கூறினாள்.. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 26-09-2019, 12:58 PM



Users browsing this thread: 4 Guest(s)