screw driver ஸ்டோரீஸ்
"மத்த விஷயம் மாதிரி இது இல்லை அசோக்கு.. நம்ம குடும்ப மேட்டரு..!! வெளில தெரிஞ்சா அசிங்கமாயிடும்.. அதான்..!!"

"ம்ம்.. சரி.. நீ எங்கிட்ட இதுவரை எதுவும் ஹெல்ப் கேட்டதில்லை.. அதனால பண்றேன்..!! அந்த பையன் அட்ரஸ் கொடு..!! நான் பாத்துக்குறேன்..!!"

"அந்த பையன் யாரு.. அவன் பேரு என்ன.. ஊரு என்ன.. எல்லாம் நீதான் கண்டுபுடிக்கணும்..!!"

"என்னத்தை வெளையாடுரியா..? வசு அதெல்லாம் உன்கிட்ட சொல்லலையா..?"

"அவ சரியான அழுத்தகாரிடா..!! சொல்ல மாட்டேன்றா..!! யாருன்னு சொன்னா.. அவனை நான் ஏதாவது பண்ணிடுவேனொன்னு பயப்படுறா..!!"

"ம்ம்ம்.. அப்டியும் நீ விடமாட்டேன்ற..? பொண்ணு வாழ்க்கையை கெடுக்குறதுக்கு.. பொட்டியை தூக்கிட்டு மெட்ராஸ்ல இருந்து வந்துட்ட..?"

"போடா அறிவு கெட்டவனே..!! நான் பாத்திருக்குற மாப்ளை கோடீஸ்வரன்டா.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுக்குறதுக்குத்தான் இப்டி பண்றேன்.. மொதல்ல அதை புரிஞ்சுக்கோ நீ..!!"

"ம்ம்.. சரி.. பண்றேன்..!! எனக்கு என்ன சாலரி..?"

"சாலரியா..?"

"ஆமாம்.. நான் எதோ சப்பை மேட்டர்னு நெனச்சேன்.. ஆளையே நான்தான் கண்டுபுடிக்கனுன்னு சொல்றியே..? ரொம்ப வேலை இருக்கும் போல இருக்கே..? எனக்கு ஒரு அமவுண்ட் பிக்ஸ் பண்ணிடு..!!"

"ம்ம்.. சரிடா.. அந்த பூந்தமல்லி ஹோட்டலை உன் பேர்ல எழுதி வச்சிடுறேன்..!! போதுமா..?"

"நெஜமாவா அத்தை சொல்ற..? நம்பலாமா..?"

"ஏண்டா.. அத்தை மேல நம்பிக்கை இல்லையா..?"

"ஹாஹா.. உன்னல்லாம் நம்ப முடியாது அத்தை..? எத்தனை பேருக்கு நீ அல்வா கொடுத்திருப்ப..? சும்மாவா அந்த ஒத்தை இட்லிக்கடை பத்து ஹோட்டலா மாறிருக்கும்..?"

"ச்சேச்சே.. அதெல்லாம் மத்தவங்களுக்கு அசோக்கு..!! நீ என் அண்ணன் புள்ளை.. உன்னை ஏமாத்துவனா..?"

"ம்ம்.. சரி நம்புறேன்..!! அந்த பையன் யாருன்னு கண்டுபுடிச்சு.. அவன் கையை காலை உடைச்சு.. அவனை நம்ம வசு பக்கம் வர விடாம பாத்துக்குறேன்.. போதுமா..?"

"போதுண்டா..!! அப்போ இன்னைக்கே அத்தையோட கெளம்பி மெட்ராஸ் வா.. மேட்டரை முடிச்சதும்.. ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம்..!!"

"இன்னைக்கே வந்தா வசுவுக்கு சந்தேகம் வரும் அத்தை.. நீ கெளம்பு.. நான் ரெண்டு நாள் கழிச்சு பொறுமையா வர்றேன்..!!"

"ம்ம்.. அதுவும் சரிதான்..!!" அத்தை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, இரண்டு கைகளிலும் காபி கப்போடு அம்மா அந்த அறைக்குள் நுழைந்தாள். சிரித்த முகத்துடன் என்னிடம் கேட்டாள். 

"அத்தையும் மருமகனும் குசுகுசுன்னு.. அப்டி என்ன ரகசியம் பேசுறீங்க..?"

நான் தலையை லேசாக சாய்த்து, ஓரக்கண்ணால் அம்மாவை பார்த்தேன். அப்புறம் கேலியான குரலில் கேஷுவலாக சொன்னேன்.

"ம்ம்ம்ம்.. நானும் அத்தையும் சேர்ந்து.. ஒரு பேங்க்கை கொள்ளையடிக்க போறோம்.. அதுக்குத்தான் ப்ளான் போட்டுக்கிட்டு இருக்கோம்..!!"

அம்மா கண்களை இடுக்கி, உக்கிரமாக என்னை முறைத்தாள். அப்புறம் வலது கையில் இருந்த காபிகப்பை டேபிளில் வைத்துவிட்டு, என்னுடைய நடு மண்டையில் 'நங்ங்ங்..!!!' என்று ஒரு குட்டு வைத்தாள். நான் வலியில் கத்த, அத்தை வடிவேலு காமடி பார்த்த மாதிரி சிரித்தாள்.

அப்புறம் ஒரு இரண்டு நாட்கள் கழித்து நான் சென்னையில் காலடி எடுத்து வைத்தேன். அத்தையின் வீடு அண்ணா நகரில் இருக்கிறது. வீடு என்று கூட சொல்ல முடியாது. பங்களா..!!! நான் சென்ற அதிகாலை நேரத்தில் அத்தைதான் வந்து கதவு திறந்து விட்டாள். எனக்கு மாடியில் ஒரு அறை ஒதுக்கி இருப்பதாகவும், அங்கே தங்கிக் கொள்ளுமாறும் சொன்னாள். அந்த அறைக்குள் நுழைந்ததுமே, பயணக்களைப்பில் கொஞ்ச நேரம் நன்றாக தூங்கிவிட்டேன். 

அப்புறம் ஒரு எட்டு மணிபோல எழுந்தேன். பாத்ரூம் சென்று ஷவரில் குளித்தேன். வெளியே வந்து வேறு உடைகள் அணிந்துகொண்டேன். டக் இன் செய்து, பெல்ட் மாட்டிக்கொண்டேன். கொண்டு வந்திருந்த பேக்கை திறந்து, கூலிங் க்ளாஸ் எடுத்து அணிந்து கொண்டபோது வசு அறைக்குள் நுழைந்தாள். டார்க் பிரவுன் நிறத்தில் ஒரு காட்டன் புடவை கட்டிக்கொண்டு, ப்ரெஷாக.. புதுமலர் போல.. தேவதை மாதிரி.. நுழைந்தாள். என்னை பார்த்ததுமே சிரிப்பை அடக்க முடியாமல், அழகாக குலுங்கி குலுங்கி சிரித்தாள். வயிற்றை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, விழுந்து விழுந்து சிரித்தாள். நான்தான் சற்று எரிச்சலாக கேட்டேன்.

"ஏய்.. ஏய்.. இரு.. இரு..!! ஏன் இப்போ இப்டி லூசு மாதிரி கனைக்கிற..?"

"பின்ன..? என்ன ட்ரெஸ் அத்தான் இது..? பிங்க் கலர் ஷேர்ட்.. க்ரீன் கலர் பேன்ட்..?? இதுல கூலிங் க்ளாஸ் வேற..? நீங்க இப்டி ட்ரெஸ் போட்டா.. அவர் கோவிச்சுக்க மாட்டாரா..?"

"எவரு..?"

"அவர்தான்.. ராமராஜன்..!!"

"ஒய்.. என்னப்பத்தி என்ன வேணா சொல்லு.. என் தலைவரை பத்தி பேசாத..!!"

"ஓஹோ..? அவர்தான் உங்க தலைவரா..? ஓகே ஓகே.. உங்களை பாத்தாலே தெரியுது..!! ம்ம்ம்.. எப்போ வந்தீங்க..?" 

"ஜஸ்ட் இன்கமிங்..!! நவ் அவுட்கோயிங்..!!"

"ஹாஹா... ம்ம்ம்ம்... அதுசரி.. என்ன திடீர்னு மெட்ராஸ் பக்கம்..?"

"ஏன்.. நாங்க மெட்ராஸ் வரக்கூடாதா..? ஒரு பிசினஸ் விஷயமா வந்தேன்..!!"
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 26-09-2019, 12:45 PM



Users browsing this thread: 5 Guest(s)