screw driver ஸ்டோரீஸ்
வா அத்தை.. எப்போ வந்த..?" நான் கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைய அத்தை என்னை ஏறிட்டு புன்னகைத்தாள். 

"இப்போதான் அசோக்கு.. நல்லாருக்கியா..?"

"ம்ம்.. நல்லாருக்கேன் அத்தை.. புள்ளைகளை கூட்டிட்டு வரலையா..? தனியா வந்திருக்க..?"

"புள்ளைகளுக்கு லீவ் கெடைக்கலை கண்ணு.. உங்களை பாத்து நாளாச்சேன்னு அத்தை மட்டும் கெளம்பி வந்தேன்.. ஏன் நான் மட்டும் வரக்கூடாதா..?"

"இல்லை.. இந்த மாதிரி நீ திடுதிப்புன்னு கெளம்பி வந்ததில்லையே.. அதான் கேட்டேன்..!!"

"நீ சொல்றதும் சரிதான்..!! ஆமாண்டா கண்ணா.. அத்தைக்கு உன்னால ஒரு வேலை ஆகணும்.. அதுக்காகத்தான் வந்திருக்கேன்..!!"

"அதான பாத்தேன்..? சும்மால்லாம் நீ இந்தப்பக்கம் வரமாட்டியே..? என்ன மேட்டரு..?"

நான் சற்றே ஏளனமாக சொல்ல, அத்தை அமைதியானாள். கொஞ்ச நேரம் என் முகத்தை அப்படியே குறுகுறுவென பார்த்தவள், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள்.

"அசோக்கு.. அத்தை ஒரு விஷயம் சொல்றேன்.. அது நம்ம ரெண்டு பேருக்குள்ளதான் இருக்கணும்..!! சரியா..?"

"என்னத்தை.. பேச்சுலாம் பயங்கரமா இருக்கு.. என்ன பிரச்னை..?"

"இந்த வசு சிறுக்கி இருக்கால்ல..?"

"ம்ம்.."

"அவ ஒருத்தனை லவ் பண்றா அசோக்கு..!!"

"என்னத்தை சொல்ற..? நம்ம வசுவா..? ஹாஹா.. கொழந்தை அத்தை அவ..!! உன்கிட்ட யாராவது தப்பா சொல்லிருப்பாங்க..!!"

"போடா கூறு கெட்டவனே..!! அவளே என்கிட்டே சொன்னான்றேன்..?"

"அவளே சொன்னாளா..? அந்த அளவுக்கு பெரியாளாயிட்டாளா அவ..?"

"ஆமாம் அசோக்கு.. சரியான அடங்காபிடாரி..!!"

‘ஆமாம்.. உன் மக உன்னை மாதிரிதான இருப்பா..?’ என நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அத்தை தொடர்ந்தாள்.

"நான் அவளுக்காக ஒரு பஞ்சு மில்லு ஓனரு பையனை பாத்திருக்கேன்..!! இவ எவனோ ஒரு பரதேசிப் பயலை லவ் பண்ணிக்கிட்டு.. நான் பாத்த மாப்பிள்ளையை கட்டிக்க முடியாதுன்னு சொல்றா..!!"

"ஓஹோ..?? ம்ம்.. சரி.. இப்போ அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்ற..?"

"அவ லவ் பண்றவனை கையை காலை முறிச்சு போடணும் அசோக்கு.. வசு இருக்குற பக்கமே அவன் தலை வச்சு படுக்க முடியாதபடி பண்ணனும்..!!"

"பாத்தியா..? இத்தனை நாளா என் நெனப்பே இல்லாம இருந்துட்டு.. இப்போ இந்த அடிதடி வேலைக்கு மட்டும்.. என்னை கூப்பிடுற பாத்தியா..?"

"ச்சேச்சே.. அப்டிலாம் இல்லடா அசோக்கு.. நம்ம குடும்பத்துலயே நீதான் என்னை மாதிரி கொஞ்சம் தைரியமான ஆளு.. அதான் அத்தை உன்கிட்ட சொல்றேன்.. மத்தபடி அத்தைக்கு எப்போவுமே உன்மேல பிரியந்தான்..!!"

‘நம்ம குடும்பத்துலயே உருப்புடாத ரவுடிப்பய நீதான்..’ அப்படித்தான் அத்தை மனதுக்குள் என்னைப் பற்றி நினைத்திருப்பாள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

"சும்மா நடிக்காதத்தை.. எல்லாம் எனக்கு தெரியும்.. அதுசரி.. உன்கிட்டதான் இந்த அடிதடிக்குலாம் ஆளு இருக்குமே.. எல்லாத்தையும் விட்டுட்டு எங்கிட்ட வந்திருக்க..?"
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 26-09-2019, 12:44 PM



Users browsing this thread: 10 Guest(s)