Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
வீழ்ந்துவிட்டாரா சூர்யா?

கடந்த செப்டம்பர் 20,  கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான படம் காப்பான். இவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும். முதன் முதலில் இவர்கள் கூட்டணியில் உருவான அயன் படம் பெரிய வெற்றிபெற்றது. ஏவிஎம் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்திருந்தது. அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் மாற்றான் என்றொரு படம் வெளியானது. அயன் அடைந்த வெற்றியினால் இந்த படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ஒரளவிற்குதான் பேசப்பட்டது. தற்போது மூன்றாவதாக இவர்கள் கூட்டணியில் வெளியாகியுள்ள காப்பான் படத்திற்கு விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் பெரிதாக பேச்சு இல்லை. கலைவையான விமர்சனங்களே வருகின்றன.
 
[Image: surya_28.jpg]
 

 
இந்த காப்பான் படத்திற்கு முன்பாக வெளியாகின படங்களான என்.ஜி.கே, தானா சேர்ந்த கூட்டம், 24, மாசு என்கிற மாசிலாமணி, அஞ்சான் உள்ளிட்ட படங்களும் சூர்யாவிற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்த வரிசையில் ஹரி இயக்கத்தில் வந்த சிங்கம்-3 மட்டுமே வெற்றியை பெற்றது. இந்த நிலையினாலும் சூர்யாவின் சமீபத்திய அரசியல் பேச்சுக்கள் பிடிக்காதவர்களும், எதிர்ப்பாளர்களும் சூர்யாவுக்கு இது பின்னடைவு எனவும், சூர்யாவின் சினிமா பயணம் அவ்வளவுதான் எனவும் பேசி வருகின்றனர். அவர்கள் பேசும் அளவிற்கு சூர்யா வீழ்ந்துவிட்டாரா என்ன?

சரி, இப்போது வீழ்ந்துவிட்டதாக சொல்லப்படும் சூர்யாவின் ஆரம்பக்கட்டம் எப்படி இருந்தது. வாரிசு நடிகராக இருந்தாலும் சூர்யாவின் ஆரம்பக்கட்டம் மிகக்கடுமையானதாகவே இருந்தது. முதல் படமான ‘நேருக்கு நேர்’ வெற்றி பெற்றாலும் அதற்கு பிறகு நாயகனாக நடித்த பல படங்கள் தோல்வி அடைந்தன. தொடர்ந்து பல முயற்சிகளுக்கு பிறகு ‘நந்தா’ திரைப்படம்தான் ஒரு நாயகனாக நிலை நிறுத்தியது. கமர்ஷியல் வெற்றி என்றால் அது ‘காக்க காக்க’வில் இருந்துதான் - இதுதான் முறையான கமர்ஷியல் வெற்றி.

அதற்கு முன்புவரை நடிக்க தெரியாதவர், நடனமாட தெரியாதவர், உயரமாக இல்லை என்று பலவிதமாக கிண்டல் செய்யப்பட்டார். இவற்றையெல்லாம் தாண்டி கடினமாக உழைத்து முன்னணி ஹீரோவானார் சூர்யா. தமிழ் சினிமா வரலாறை கவனிக்கத்தவர்களுக்கு தெரியும் அதில் வெற்றி நாயகர்களாக திகழ்ந்தவர்களில் பெரும்பாலானோருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது இல்லை. ஆரம்பக்கட்டம், சற்று கடுமையாகவும், கரடுமுரடா இருந்து அதை தாண்டி விடாமுயற்சியோடு தொடர்ந்தவர்களுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும்.
[Image: vijay-surya.jpg]
 

 
இப்படி தோல்விகளையும் கடந்து முன்னணி நாயகனான சூர்யா நடிப்புடன் நிறுத்திக்கொள்ளவில்லை தனது அகரம் அறக்கட்டளை மூலமாக வாய்ப்பிழந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி அளித்து கை தூக்கிவிடுகிறார். சமீப காலமாக பல்வேறு பொது பிரச்சனைகள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் மேலோட்டமானவை அல்ல. இப்படி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடி வரும் சூர்யாவிற்கு இந்த இடைவெளி ஒரு வீழ்ச்சி அல்ல.

“ ஒரு தடவ ஷூட்டிங் முடிச்சிட்டு ரயிலில் வந்து கொண்டிருந்தோம். அப்போது நான் அசதியில் தூங்கிவிட்டேன். திடீரென எழுப்பிய ரகுவரன் சார் ‘உனக்கு எப்படிடா தூக்கம் வருது. இன்னும் எதையும் சாதிக்காம’ என்று கேட்டார். அன்றிலிருந்து நான் சினிமாவில் வெற்றிபெறும்வரை சரியாக தூங்கியது கிடையாது”- இது சூர்யா முன்பு ஒரு பேட்டியில் கூறியது. இப்படிப்பட்ட அவர் மீண்டும் தன்னிடத்திற்கு வருவார். வரும்வரை உறங்க மாட்டார்!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 26-09-2019, 12:39 PM



Users browsing this thread: 11 Guest(s)