26-09-2019, 12:25 PM
மோடியை ஏற்காதவர்கள் இந்தியரில்லை: மத்திய அமைச்சர்
புதுடில்லி : இந்தியாவின் தந்தையாக மோடியை ஏற்க தயாராக இல்லாதவர்கள் தங்களை இந்தியர்கள் என சொல்லிக் கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
செப்.,22 ம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ஏராளமான பிரச்னைகள் சண்டைகள் இருந்த போதிலும் மக்களை ஒன்றுபடுத்திய பிரதமர் மோடி, இந்தியாவின் தந்தை என புகழ்ந்து பேசினார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த வார்த்தைக்கு காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், வெளிநாட்டில் வசிப்பவர்கள் என பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பிரதமர் மோடி என்ற தனிநபர் மற்றும் தகுதியாலேயே ஏற்பட்டது. அமெரிக்க அதிபரிடம் இருந்து முதல் முறையாக இது போன்றதொரு வார்த்தை வந்துள்ளது. வேறு எந்த தலைவரையும் இல்லாமல் இந்திய பிரதமரை மட்டும் பாராட்டி உள்ளார். இதனால் பெருமை கொள்ளாதவர்களை இந்தியர்களாகவே கருத முடியாது. டிரம்ப் பேசியதில் காங்.,க்கு ஏதாவது பிரச்னை என்றால் அவரிடம் நேரடியாக வாதம் செய்யட்டும் என்றார்.

first 5 lakhs viewed thread tamil