Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#70
"திவ்யா.. ஏய் திவ்யா" என்று சத்தமாக கத்தினான் அன்பு. குளித்து வந்து உடை மாற்றி தலைவாரிக் கொண்டிருந்தான். 

உள்ளறைக்குள் இருந்து வெளியே வந்தாள் திவ்யா.  
"ஏன் இப்ப ஊருக்கே கேக்குற மாதிரி கத்தற? என்ன?"

"எங்கடி என் போனு?" முறைத்தபடி அவள் கையைப் பார்த்தான். அவள் கையில் கத்தி  இருந்தது. வெங்காயம்  உழித்துக் கொண்டிருப்பாள் போலிருந்தது. தன் சின்னக் கூந்தலை சுருட்டி கொண்டை போட்டிருந்தாள். 

அவனது மொபைல் உள்ளே பாடிக் கொண்டிருந்தது. 
"அதுக்கா இப்படி கத்தற? உள்ள பாடிட்டிருக்கு பாரு" 

"எடுத்துட்டு வா. எத்தனை தடவை சொல்லியிருக்கேன். என் போனை எடுக்காதேனு?"

"ஆமா.. அது பெரிய இது.." என்று முனகியபடி திரும்பிப் போய் அவன் மொபைலை எடுத்து வந்தாள். அவன் கை நீட்டினான். 'லொட்'டென அவன் கையில் வைத்தாள். 
"இந்தா.. உன் போனு"

"இனிமே எடுத்த.. கைய முறிச்சுருவேன்" என்றான். 

அவனை முறைத்தாள் திவ்யா. 

"என்னடி மொறைக்குற?" என்று  அவளின் முன் நெற்றியில் தட்டினான். 

"சீ போடா" என்று விட்டு திரும்பி உள்ளே போய் விட்டாள் திவ்யா. 

உடை மாற்றி தலைவாரிய அன்பு சீட்டியடித்தபடி வெளியே போய் பைக்கைக் கிளப்பினான்..!!!

காலை மிகவும்  உற்சாகமாக இருந்தாள் கவிதா. இன்று அவள்  சுற்றுலா கிளம்புகிறாள். அதிகாலையில் நேரமே எழுந்து குளித்து நல்ல உடை அணிந்து வந்து நவநீதனை எழுப்பினாள். 

"என்னடி?" கண் விழித்துக் கேட்டான். 

"நான் போயிட்டு வரேன்" 

"கிளம்பிட்டியா?"

"ம்ம்ம்"

"நல்லபடியா போயிட்டு வா"

"உனக்கு  என்ன வேணும் மாமா?"

"எனக்கா?"

"ம்ம்ம் "

"முத்தம் குடு" என்றபடி எழுந்தான். 

"சீ போ" என்று வெட்கப் பட்டாள். 

சிரித்தான். "பணமெல்லாம் இருக்கா?"

"ம்ம்ம்.. இருக்கு"

"பாத்து. சிக்கனமா செலவு பண்ணு. அதுக்காக எதுவும் சாப்பிடாம இருந்துடாத. புடிச்ச ஐட்டமா இருந்தா நல்லா வாங்கி சாப்பிடு"

"சரி. எனக்கு நேரமாச்சு. நான் போறேன்"

"பாத்து போயிட்டு வா. ஜாலியா  சுத்திட்டு வா"

"இந்த ட்ரஸ் நல்லாருக்கா மாமா?"

"ஏன்டி?"

"சொல்லேன்"

"நல்லாருக்கு. ஆனா நீ தான்  ஒரு முத்தம் கூட தர மாட்டேங்குறியே?"

"போ" என்று சிணுங்கியவள் இரண்டு  எட்டுக்கள் வைத்து போய்.. மீண்டும் சட்டென திரும்பி வந்து  அவன் கன்னத்தில்  ஒரு முத்தம் கொடுத்து விட்டு வெளியே ஓடினாள்..!!!

நவநீதனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அதனால் சும்மா இருக்கும் நேரத்தில் தன் தாயுடன் போய் ஆடுகள் மேய்த்து வந்தான். அவர்களுக்கும் பெரியது, குட்டி என்று பதினைந்து  ஆடுகளுக்கு மேல்  இருந்தன. அத்தைக்கு ஆடுகளுடன் சேர்த்து  இரண்டு சின்ன மாடுகளும் இருந்தன. 

பொதுவாக  ஆடுகளை மேய விட்டபின் ஊர்க்கதை பேசுவது என்பது வாடிக்கையான ஒன்றாக இருந்தது. இன்று  அப்படி பேசியபோது அத்தை சொன்ன செய்தி  அவனுக்கு கொஞ்சம்  அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அது பிரமிளாவின் குடும்பக் கதை. அவளது  அப்பா இப்போது இவர்களிடம் இருந்து பிரிந்து போய் வேறொரு பெண்ணுடன் வாழ்கிறாராம். 

"அது யாருத்தே?" திகைப்புடன் கேட்டான் நவநீதன். 

"அது ஒரு இருளப் புள்ள" என்றாள்  அத்தை. வெற்றிலையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள். 

"இருளப் புள்ளையா? அது எப்படி செட்டாச்சு?"

"மலைக்கு.. அவங்க ஊருக்கு போக வர  இருந்துருக்கான். ரெண்டு மூணு இருளாசுக அவனுக்கு பழக்கமாயிருக்காங்க. அப்படி  இருந்த எடத்துல இந்த புள்ள எப்படியோ இவன்கூட நல்லா பழகிருச்சு. இப்ப அது கூடத்தான் இருக்கான். கல்யாணமாகிட்ட மாதிரிதான்"

"அப்ப.. இவங்க கூட இல்லையா?"

"அப்பப்ப வந்து போவான். ஆனா இருக்குறது என்னமோ அந்த புள்ளகூடத்தான். இப்ப ஏதோ வயித்துல ஆகியிருக்குனு சொன்னாங்க. அவளை கேட்டா தெரியும்"

"ஓ.. அதுக்கு  என்ன வயசு இருக்கும்? "

"அது என்ன.. இவ வயசுதான் இருக்கும்"

"எவ வயசு.? பிரமிளா வயசா?"

"ஆமா. பெரிய சண்டையே ஆகிருச்சு. ஊரெல்லாம் கூடி பஞ்சாயத்தெல்லாம் பண்ணாங்க. என்ன செஞ்சு என்ன ஒண்ணும் வேலைக்கு ஆகல. அந்தாளுனால அந்த புள்ளைய விட்டு  இருக்க முடியல. இந்த வீட்டை இவங்க பேருக்கே எழுதி குடுத்துட்டு அந்த புள்ளை கூடயே போய் சேந்துட்டான்" என்றாள் அத்தை..!!!
[+] 1 user Likes கல்லறை நண்பன்.'s post
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 25-09-2019, 01:09 PM



Users browsing this thread: 11 Guest(s)