Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
பிக்பாஸில் இருந்து வெளியேறிய சேரன்
[Image: NTLRG_20190923103507404244.jpg]

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இயக்குநர் சேரன் வெளியேறினார்.

பிக்பாஸ் சீசன் இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலேவுக்காக கடுமையான டாஸ்க்குகள் தரப்பட்டன. போட்டியாளர்களும் தங்களது முழு பலத்தையும் கொடுத்து இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இதில், அதிக மதிப்பெண்கள் பெற்றதால் முகென் வெற்றி பெற்றார். கமல் அவருக்கு டிக்கெட் டு பினாலேவை நேரில் அழைத்துக் கொடுத்தார். இதனால் பைனலுக்குச் செல்லும் முதல் போட்டியாளர் என்ற பெருமை முகெனுக்கு கிடைத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, இந்த வாரம் நாமினேசனில் சேரன், கவின், லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் இருந்தனர். இவர்கள் நான்கு பேருமே முக்கிய போட்டியாளர்கள் என்பதால், இவர்களில் யார் வெளியேறப் போவது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் ஷெரின், கவின் காப்பாற்றப்பட்டனர். சேரன், லாஸ்லியா தனியாக அழைத்து ஒரு அறையில் அமர வைக்கப்பட்டனர். முன்னதாக லாஸ்லியா, தான் வெளியேற விரும்புவதாக பிக்பாஸிடம் தெரிவித்தார். இதன் காரணமாக அவரும் சேரன் உடன் இணைந்து வெளியேறுவதாக கூறப்பட்டது. அதைப்போல் இருவரும் வெளியேறுவது போன்ற நிகழ்வுகளும் நடந்தன. பின்னர் இறுதியாக சேரன் வெளியேற்றப்பட்டு, லாஸ்லியா மீண்டும் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவருக்குத் தான் நாமினேசனில் மிகக் குறைவான வாக்குகள் கிடைத்தது. அப்போது அவர் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளராக விளையாடி வந்தார். கடந்த வாரம் தரப்பட்ட டாஸ்க்குகளை செய்ய முடியாமல், அவர் உடல்நிலை மிகவும் பாதித்தது. முதுகுவலி உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர் பெரும் அவதிப்பட்டார். மேலும் அவருக்கு குறைவான ஓட்டுகள் கிடைத்ததாலும் பிக்பாஸில் இருந்து வெளியேறினார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 24-09-2019, 09:36 AM



Users browsing this thread: 1 Guest(s)