24-09-2019, 09:28 AM
பெயரை மாற்றிய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு
[/url]
[url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2374289&Print=1]
இஸ்லாமாபாத்: சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவும், பாகிஸ்தானில் எளிதாக பயிற்சி பெறவும் வகையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பானது, தனது பெயரை, மஜ்லிஸ் வுரசா இ சுகுதா ஜம்முவா காஷ்மீர் என பெயர் மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அமைப்பின் தலைவராக, பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துல் ரவுப் அசார் செயல்பட்டு வருகிறார்.
இது தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், மசூத் அசாரின் உடல்நலக்குறைவு காரணமாக அவரது சகோதரன் தான், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை நிர்வகித்து வந்தான், தற்போது, பெயரை மாற்றி கொண்டு அவனை தலைமை ஏற்று செயல்பட்டு வருகிறான். முன்னர், இந்த ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பு, குதம் உல் இஸ்லம், அல் ரெஹ்மத் டிரஸ்ட் என்ற பெயரிலும் செயல்பட்டு வந்தது. இந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனான மவுலானா அபித் முக்தார், ஏற்கனவே, இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தாக்குதல் நடத்த வேண்டும் எனக்கூறியுள்ளான்.
ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில் ராணுவ முகாம்கள் மற்றும் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்காக 30 தற்கொலைப்படை பயங்கரவாதிகளை உருவாக்கியுள்ளது. மசூத் அசாரின் சகோதரன் தான், பாலகோட்டில் பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமை திறந்து வைத்ததுடன், சியால்கோட், பவல்பூரில் பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்கள் தேர்வு செய்து வருகிறான். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

first 5 lakhs viewed thread tamil