24-09-2019, 09:26 AM
வங்கி அதிகாரிகள் போராட்டம் வாபஸ்
சென்னை: வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வங்கிகள் இணைப்பை எதிர்த்து, அதிகாரிகள் சங்கத்தினர், வரும், 26, 27ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். இதையடுத்து, வங்கி பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று, வங்கி அதிகாரிகள் சங்கத்தினர், மத்திய நிதித்துறை செயலர், ராஜூவ் குமாரை சந்தித்து பேசினர்.
அப்போது, வங்கி இணைப்பு குறித்து ஆய்வு செய்ய, கமிட்டி அமைப்பது மற்றும் வங்கிகளின் வேலை நாட்களை, வாரத்தில், ஐந்து நாட்களாக குறைப்பது மற்றும் ஊதிய உயர்வு குறித்து ஆய்வு செய்யப்படும் என அவர் உறுதி அளித்தார். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் அறிவித்து இருந்த, தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

first 5 lakhs viewed thread tamil