சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
சங்கீதா - இடை அழகி 64

ஏன்டா எப்போவும் கண்ணை மூடினாள் இப்படி நீயே வர..” – கண்களை மூடி சாய்ந்தவாறு லேசாக அழும் விதம் பேசிக்கொண்டாள். இப்படி அவனுடைய சிந்தனைகளிலேயே மூழ்கி இருக்கிறோம்… இது சரியா?… கேள்விகள் கொந்தளித்து எழுந்து கொண்டிருந்தது அவளுக்குள், இப்போது அதன் விளைவு குழப்பம். குழப்பத்தின் உச்சத்துக்கு சென்றாள். அவளது பத்து விரல்களில் கிட்டத்தட்ட ஒன்பது விரல்களில் நகங்கள் கடிக்கப் பட்டு தரையில் சிறு சிறு துண்டுகளாக இருந்தது, நகங்கள் இழப்பதற்கு காரணம் ராகவ் பற்றிய அவளது சிந்தனைகள் செய்த வேலை. உடல் முழுதும் ரத்த ஓட்டம் அதிகரித்தது, சற்றே உடலும் வேர்த்தது. இப்போது அவளுடைய ஆழ் மனது அவளுக்கு ஒரு கேள்வி எழுப்பியது, அந்த கேள்வி அவளை சற்று உலுக்கி நிமிர்ந்து உட்கார வைத்தது. அந்த கேள்வி “உன்னையும் அறியாமல் நீ ராகவ் மீது அடங்காத காதலில் இருக்கிறாயா?” என்பதுதான்.


முக்கால்வாசி பதில் மெளனமாக “ஆமாம்” என்றும் சொற்பமான பதில் “இல்லை” என்றும் அவள் மணம் உள்ளுக்குள் போராடிக்கொண்டிருந்தது. மீண்டும் கண்களை மூடினாள்…. ஆமாம்…, இல்லை…., ஆமாம்….. ஆமாம்…., ஆமாம்…., இல்லை…. இல்லை, ….. இந்த ஆமாம் இல்லை என்ற வார்த்தைகள் அவளது மனதை குடைந்தது. சட்டென்று chair ல் இருந்து எழுந்து நின்று கண்ணாடியைப் பார்த்தாள், “இல்லை” என்று எண்ணும் போழுது அவள் முகம் பொய் பேசுகிறது என்று அவள் கண்கள் அவளுக்கே திருப்பி காண்பித்தது. ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாக தெரிந்திருந்தது. ராகவின் எண்ணங்கள் வேர் முளைத்து அவளின் மனதில் நன்றாக ஊனி இருக்கிறதென்று. ஹாலில் ஒரே இடத்தில் அமர பிடிக்கவில்லை, அங்கும் இங்கும் வளாத்தினாள். ஒரு கட்டத்தில் உள்ளுக்குள் இல்லை இல்லை என்று ஜீரணிக்க முடியாத பதிலை சொல்லி ஏமாற்ற முயற்சி செய்கையில் மணம் வெம்பியது…. சிறிது நேரத்திற்கு பிறகு மெதுவாக பாத்ரூம் சென்று கதவை சாத்தினாள். கொஞ்ச நேரம் சத்தம் இல்லை….. உள்ளே மஞ்சள் வெளிச்சத்தில் கண்ணாடியின் முன் நின்றிருந்தாள். washbasin முன்பாக சாய்ந்து நின்றுகொண்டிருக்கும்போது முந்தானை சரிந்து இருந்தது. எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் குனிந்த தலையோடு நிற்கையில் கீழ் நோக்கி பார்க்கும்போது அவளது கழுத்தினில் தாலி தொங்கியது. அதை ஒரு நிமிடம் கைகளில் பிடித்து உத்துப் பார்த்தாள்.. பார்த்தாள்…., மீண்டும் பார்த்தாள்…. சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே இருந்தாள். “வெறும் ஒரு மஞ்சள் கயிறு என் வாழ்கையில் எத்தனையோ ஆசைகளுக்கும், விருப்பங்களுக்கும் தடை போட்டுடுச்சி. பத்துப் பேரை கட்டிப் போடுற இரும்பு சங்கிலிக்கு கூட இவ்வளவு சக்தி இருக்காது ஆனால் இந்த கயிறு ஒரு பொம்பளையோட வாழ்க்கையையே புரட்டி ப் போடுதே. ஒரு பெண்ணுக்குரிய தனிப்பட்ட ஆசைகளையும், விருப்பு வெறுப்புகளையும் உட்பட” என்று எண்ணிக் கொண்டிருக்கையில் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் தாலியின் மீது விழுந்தது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் தன்னை ராகவிடம் இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மை கண்ணாடியில் தெரியும் சங்கீதாவின் கண்கள் அவளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அம்மாவைத் தேடி ஸ்நேஹா படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்தாள், “அம்மா….அம்மா எங்கம்மா இருக்கே, வாமா?” என்று அழைத்த அந்த சிறுமி பாத்ரூமை கடந்து செல்லும்போது கதவின் கீழ் மஞ்சள் வெளிச்சம் எரிவதைப் பார்த்தாள் ஸ்நேஹா, அம்மா…. அழைத்ததுக்கு சத்தம் இல்லை… அம்மா இருக்கியா மா.. சங்கீதா லேசாக விசும்பும் சத்தம் கேட்டது ஸ்நேஹாவுக்கு…. அம்… – முழுதாக “மா” என்று ஸ்நேஹா முடிப்பதற்குள் உள்ளுக்குள் இருந்து சங்கீதா “ஹம்மாஆஆ” என்று கதறி அழும் சத்தம் கேட்டது. “அம்மா….” – ஸ்நேஹா பயந்தாள். “அம்மா என்னம்மா ஆச்சு? ஏன்மா அழுவுற? வாமா வெளியே..” – என்று சற்று பயத்தில் சொன்னாள் “சங்கீதா தன்னை சுதாரித்துக் கொண்டு “ஒன்னும் இல்லடா செல்லம், “இஸ்ஸ்.. இஸ்ஸ்..” (மூக்கை உறிந்தால்) நீ போய் படுத்துக்கோ நான் வரேன்.” கண்களை சரிந்த முந்தானை நுனியால் எடுத்து துடைத்துக் கொண்டு கண்ணாடியைப் பார்த்தாள். கண்களில் மை அழிந்திருந்தது. அதையும் முந்தானையால் துடைத்தாள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 23-09-2019, 06:41 PM



Users browsing this thread: 1 Guest(s)