Romance உன் ஆசை முகம் தேடி
#40
சனிக்கிழமை காலை...

முகத்தில் பதற்றத்துடன் இருந்தனர் பிரியாவும், ராஜேஸ்வரியும்...

“ஐயோ அம்மா, பிரியா! நீங்களே எல்லாத்தையும் கெடுத்துடுவீங்க போல இருக்கே! நார்மலா இருங்க... அண்ணா எப்போ வந்தான்ம்மா?”

“இரண்டு மணி இருக்கும்ப்பா... பாவம் ரொம்ப டையர்டா இருந்தான். வேலை அதிகமாம்... நீ கூப்பிட்டதால் தான் வந்தேன்னு சொன்னான்... என்ன விஷயம்னு என்கிட்டே கேட்டான், நான் எதுவும் சொல்லலை...”

“குட் அத்தை! அவர் கிட்ட ஏதாவது கதை சொல்லிடுவோம்... லாவண்யாவை ஒன்பது மணிக்கு வர சொல்லி இருக்கேன்...”

அவள் பேச்சின் கடைசி சில வார்த்தைகளை கேட்ட படி அறைக்குள் வந்த சுபாஷ்,

“யாரை வர சொல்லி இருக்க ப்ரியா?” என்றான்.

பேச்சு முழுவதையும் கேட்டு விட்டானா என்று திடுக்கிட்டு விட்டு, பின் அவன் முகத்தில் அதற்கான மாற்றங்கள் எதுவுமில்லை என்பதை கண்டுக் கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள் ப்ரியா.

“நம்ம ஸ்கூலில் புதிசா சேர்ந்திருக்க மேத்ஸ் டீச்சர் சுபாஷ்...”

“ஓ!”

“நான் வந்தப்புறம் ரெக்ரூட் செய்த முதல் டீச்சர் ஆச்சே, அது தான் உங்களுக்கும் இன்ட்ரோ செய்து ஒரு சபாஷ் வாங்கலாம்ன்னு ஆசை...”

“நீ செய்தால் எல்லாம் சரியா தான் இருக்கும். பால்ராஜ் சாரும் சரியான ஸ்ட்ரிக்ட் ஆசாமி... சரி இல்லைனா நீ என்ன, அம்மா சொல்லி இருந்தால் கூட அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுத்திருக்க மாட்டார்..”

“ரொம்ப சரி சுபாஷ்... இவங்க அவருக்கு தெரிஞ்சவங்க தான்... ஆனாலும் எங்க டெசிஷன் கேட்டு தான் முடிவு செய்தார். அதனால தான் அவங்க கேட்ட ஹெல்பையும் செய்ய அத்தை சம்மதிச்சாங்க...”

 
“ஹெல்பா?”

“ம்ம்... இந்த புது டீச்சருக்கு சின்ன வயசு தான் ஆனால் தனியா இருக்காங்க, ஸோ தங்க பாதுகாப்பான இடம் வேணும்னு சொல்லி இருந்தாங்க... அத்தை நம்ம கெஸ்ட் ஹவுஸில் தங்க வச்சிருக்காங்க...”

“ஓ! பாவம்... எப்போ தான் பெண்களுக்கு நம்ம நாட்டில் பாதுகாப்பு ஏற்படும்னு தெரியலை... ச்சே...”

அப்போது, அங்கே வந்த கனகம்,

“பெரியம்மா, நம்ம டீச்சர் வந்திருக்காங்க...” என்றாள்.

ப்ரியாவை பொருள் பொதிந்த ஒரு பார்வை பார்த்து விட்டு,


“இங்கேயே அழைச்சிட்டு வா கனகா...” என்றாள் ராஜேஸ்வரி.
Like Reply


Messages In This Thread
RE: உன் ஆசை முகம் தேடி - by Seaeagle28 - 23-09-2019, 06:45 AM



Users browsing this thread: 3 Guest(s)